சினிமா

தல 61 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் தேதி அறிவிப்பு.. மஞ்சு வாரியர் எடுத்த முடிவு

AK61 Boney Kapoor and Ajithkumar

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் தற்போது அவருடைய 61வது படத்தின் வேலைகளில் தீவிரமாக ஈடுபட உள்ளார். ஹைதராபாத்தில் நடிகர் அஜித் தனது படப்பிடிப்பு வேளையில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஷூட்டிங்கில் இருந்து வெளியேறி தனது குடும்பத்தினருடன் ஐரோப்பிய கண்டத்துக்கு சுற்றுலா சென்றார்.

பைக் ரைடு, குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பு என பொழுதை கழித்த அஜித் தற்போது ஒன்றரை மாதத்திற்கு பிறகு மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இதனை அடுத்து தனது அடுத்த படத்திற்கான வேலையை அஜித் இறங்க உள்ளார். நடிகர் அஜித் நடிக்க வேண்டிய இறுதி செட்யூல் வரும் ஆகஸ்ட் முதல் வாரம் புனேவில் நடைபெறுகிறது. சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் முடிவடைகிறது.இதனை அடுத்து படம் தீபாவளிக்கு அல்லது டிசம்பர் மாதமோ ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

நடிகர் அஜித் தற்போது ஷூட்டிங் திரும்பி இருக்கிறது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அஜித்துடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்துள்ள மஞ்சு வாரியர் , அஜித்துக்காக முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளார். அதன்படி தல 61 படப்பிடிப்புக்காக தனது முழு நேர கால்ஷிட்டை மஞ்சுவாரியர் கொடுத்துள்ளார். இதனால் கேரளாவில் பிரித்திவிராஜ் உடன் நடிக்க இருந்த காப்பா என்ற படத்தில் இருந்து மஞ்சு வாரியர் விலகி இருக்கிறார்.

நடிகர் அஜித்துக்காக இந்த தியாகத்தை அவர் செய்துள்ளார் தல 61 திரைப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இது வங்கியில் நடைபெறும் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்காக கடந்த ஏழு மாதமாக ஹச் வினோத் திரைக்கதையை செதுக்குவதில் மட்டும் கவனம் செலுத்தி இருக்கிறார்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top