சினிமா

29 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இரு ஆண் அழகன்கள்..  கோலிவுட்டில் ஆச்சரியம்

தமிழ் சினிமாவின் இரண்டு ஆணழகன் என்றால் அது அரவிந்த்சாமியும் அஜித்தும் தான்.ஒரு காலத்தில் பெண்களின் மனதை கவர்ந்த இந்த இரண்டு நட்சத்திரங்கள் 29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைய உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது .நடிகர் அரவிந்த்சாமி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் வில்லனாக நடித்து வருகிறார். அவர் நடித்த தனி ஒருவன் போகன் போன்ற படங்கள் செம ஹிட் ஆனது.

இந்த நிலையில் தற்போது அஜித்துக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க உள்ளார். ஏகே 62 படத்தில் தான் இந்த இணைப்பு சாத்தியமாக இருக்கிறது. விக்னேஷ் சிவன் அஜித்துக்காக கிளாஸான ஒரு கதையை தயார் செய்து இருக்கிறார். அஜித் போன்ற கிளாஸ் நாயகனுக்கு வில்லனாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு அரவிந்த்சாமி தான் சரியான நபராக இருப்பார் .

இதன் மூலம் 1994ஆம் ஆண்டு வெளியான பாசமலர் படத்திற்கு பிறகு இருவரும் நடிக்க உள்ளனர். இதேபோன்று இந்த படத்தில் மேலும் முக்கியமான நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். வீரம் படத்திற்குப் பிறகு அஜித் உடன் நடிகர் சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக படங்களை செய்து வரும் நிலையில் திடீரென்று அஜித் படத்தில் இணைந்துள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

விக்னேஷ் சிவன் திரைப்படம் என்பதால் ஹீரோயின் நயன்தாரா என்று நாம் சொல்லாமலே உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்க உள்ளது. ஏகே62 படத்தை தீபாவளிக்கு வெளியிட அஜித் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே தளபதி 67 திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் மிகப் பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் ,தற்போது ஏகே 62 படத்திலும் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து இருப்பது தீபாவளி பந்தயத்தையும் மேலும் சுவாரசியமாக மாற்றி உள்ளது. இரண்டு ஆண் அழகன்கள் நடிப்பதால் ஏகே 62 படத்திற்கு 80ஸ் 90ஸ் பெண்கள் அதிக அளவில் திரையரங்குகளில் சென்று பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top