சினிமா

ஒரே படப்பிடிப்பு தளத்தில் ரஜினி, அஜித்.. வெறித்தன செய்தி நிச்சயம் வரும்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராகிய நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது தன்னுடைய 169 வது படமான ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்பொழுது சென்னையில் நடந்து வருகிறது. இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்தில் திரை உலகில் முன்னணி நட்சத்திரங்களான ஐஸ்வர்யா ராய், பிரியங்கா , ரம்யா கிருஷ்ணன் ,கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி இருந்தது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கம்பீரமான தோற்றத்தோடு காணப்பட்டார். இந்தத் திரைப்படத்தின் நடிகர் ரஜினிகாந்த் முதன்மை காவலராக நடித்து வருகிறார்.

இப்படி ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் மற்றும் ஒரு முக்கிய முன்னணி நடிகரான ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித்தின் உடைய துணிவு திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பும் அதே இடத்தில் நடந்து வருகிறது. நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை வலிமை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வினோத் தான் துணிவு துணை படத்தையும் இயக்கி வருகிறார் . இந்த திரைப்படத்தின் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

இந்தத் துணிவு திரைப்படத்தின் உடைய ஒரு பாடலின் படப்பிடிப்பை சென்னையில் ஜெயிலர் திரைப்படம் எடுக்கும் அதே ஸ்டூடியோவில் எடுத்து வருகிறார்கள். திரைப்படத்தின் படப்பிடிப்பும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஒன்றின் பின் ஒன்றாக ஒரே ஸ்டூடியோவில் எடுக்கப்படுவதால் தமிழ் சினிமாவின் முதன்மை நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தலை அஜித் ஆகியோர் சந்திப்பதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்க்கிறார்கள். அதைவிட ஆவலாக அந்த சந்திப்பின்போது எடுக்கப்படும் புகைப்படத்திற்காக காத்திருக்கிறார்கள்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படமும் தல அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் வெற்றி படங்களாக அமையும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top