சினிமா

அஜீத் 62 : இயக்குனர் மகிழ் திருமேனிக்கு கட்டளைகள் விதித்துள்ள அஜிதத்குமார்… !

AK62 Magizh Thirumeni

அஜித்குமாரின் 62வது படத்தை இயக்கவிருந்த விக்னேஷ் சிவன் ஸ்கிரிப்டில் ஏற்ப்பட்ட பிரச்சினையால் விலகினார். அஜித் எனும் மெகா ஸ்டாரை வைத்து தயாரிப்பதால் லைகா நிறுவனம் மிகவும் கண்டிப்பாக உள்ளது. தற்போது அஜித் 62 படத்தை இயக்க மகிழ் திருமேனி தேர்வாகியுள்ளார். கிளாசியான திரில்லர் படங்களை இயக்குவதில் வல்லவர் இவர்.

மகிழ் திருமேனியின் உழைப்புக்கு அவர் இந்த நிலையை அடைவது சற்று தாமதம் தான். முன்னரே விஜய்யை இயக்க வேண்டியவர். ஆனால் நடக்காமல் போனது. தற்போது அவருக்கு அஜித் கிடைத்துள்ளார், நிச்சயம் இதைச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதில் தீவிரமாக இருப்பார் மகிழ் திருமேனி. படத்திற்கான இசை வேலைகளை சந்தோஷ் நாராயணனிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

லைகா நிறுவனத்திடம் இருந்து இதுவரை இன்னும் எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இன்று கிடைத்துள்ள அப்டேட் தரமானது, என்னவென்றால் அஜித் 62 படத்தின் அறிவிப்பை ஓர் புரோமோ மூலம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் விஜய்யின் லியோ படத்தைப் போல ரீலீஸ் தேதியை முன்னரே வீடியோவில் பொறித்து பட வேலைகளை துவங்க வேண்டும் என அஜித் கண்டிப்பாக கூறியுள்ளாராம். மார்ச் மாதம் முதல் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

எந்த ஓர் இடைவேளையும் இல்லாமல் படத்தை நான்கே மாதங்களில் முடித்துவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஸ்கிரிப்டில் ஆங்காங்கே சில மாஸ் காட்சிகள் இருப்பது அவசியம் என அஜித் கேட்டுள்ளதால் இயக்குனர் மகிழ் திருமேனி ஸ்கிரிப்டை திருத்தும் பணியில் பிஸியாக உள்ளார். இந்த வாரம் லைகா நிறுவனத்திடம் இருந்து ரசிகர்கள் மெகா அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top