Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாதல அஜித்துடன் மோதும் பிரபாஸ்.. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித்துடன் மோதும் பிரபாஸ்.. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

- Advertisement -

இந்திய சினிமாவில் பாகுபலிக்கு பிறகு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் என்றால் அது பிரபாஸ் தான். பிரபாஸின் தோல்வி படங்களே குறைந்தபட்சம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெறுகிறது. இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இதில் அவர் நடித்த ஆதிபுரூஸ் டிரைலர் செம காமெடியாக இருந்ததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளப்பட்டுள்ளது. மேலும் கிராபிக்ஸ் காட்சிகளை மீண்டும் மாற்றும் நடவடிக்கையில் பட குழு ஈடுபட்டுள்ளது. இதனை அடுத்து கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் திரைப்படமும் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் தற்போது ப்ராஜெக்ட் கே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

விஞ்ஞான கதையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட உள்ளது. அமிதாப்பச்சன்,தீபிகா படுகோன், தீஷா பட்டாணி ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். முதலில் இந்த படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் 62 ஆவது படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அஜித்தின் படத்தின் இயக்குனரே முடிவாகாத நிலையில் தீபாவளிக்குள் படத்தை முடிப்பது மிகவும் சிரமம் என்பதால் துணிவு படம் போல் பொங்கலுக்கு ரிலீசாகலாம் என லைகா  திட்டமிட்டது.

- Advertisement -

ஆனால் தற்போது பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படம் ரிலீஸ் ஆவதால் அஜித் படத்திற்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நிச்சயம் அஜித் படம் தான் ஓடும் என்றாலும் வெளிநாடுகளில் தற்போது தான் அஜித்தின் மார்க்கெட் துணிவு மூலம் விரிவு அடைந்துள்ளது. ஆனால் ப்ராஜெக்ட் கே வெளியானால்  அது நிச்சயம் தல 62 படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும். ஏற்கனவே கே ஜி எஃப் 2 படத்துடன் பீஸ்ட் ரிலீஸ் ஆகி அதன் வசூல் பாதிக்கப்பட்டது. இதேபோன்று அஜித்துக்கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

Most Popular