Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாகிங் ஆஃப் ஒபனிங்.. யூடியூபில் சாதனை படைக்கும் துணிவு.. வினோத் வைத்த டிவிஸ்டை கவனிச்சீங்களா?

கிங் ஆஃப் ஒபனிங்.. யூடியூபில் சாதனை படைக்கும் துணிவு.. வினோத் வைத்த டிவிஸ்டை கவனிச்சீங்களா?

- Advertisement -

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படும் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியே வந்துள்ள இந்த ட்ரெய்லர் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. இந்த ட்ரெய்லருக்கு எதிர்மறையான விமர்சனங்கள் விஜய் ரசிகர்களிடம் இருந்து வந்தாலும் அஜித் ரசிகர்கள் இந்த டிரைலரை கொண்டாடி வருகின்றனர்.

டீசர் ஏழு மணிக்கு வெளியான நிலையில் தற்போது நான்கு மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்கள் துணிவு ட்ரைலரை பார்த்திருக்கிறார்கள். மேலும் கிட்டதட்ட 8 லட்சம் பேர் இதுவரை ட்ரெய்லருக்கு லைக் செய்து இருக்கிறார்கள்.
இது முந்தைய அஜித் படத்தை விட அதிகம் என கூறப்படுகிறது. அஜித் எப்போதுமே வில்லனாக நடித்தால் அதற்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். மங்காத்தா, வேதாளம்  போன்ற படங்களில் அஜித்  நெகட்டிவ் கேரக்டர்களை காண்பித்து இருப்பார்.

- Advertisement -

அதே போன்று ஒரு நெகட்டிவ் கேரக்டரை துணிவு திரைப்படத்தில் அஜித் செய்திருக்கிறார்.மேலும் இந்த ட்ரெய்லரில் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கும் வகையில் அமைந்திருக்கிறது. நேற்று துணிவு படத்தில் நடித்த கேரக்டர்களின் பெயர் குறித்து படக்குழு வெளியிட்டது. ஆனால் அஜித்குமாரின் கேரக்டர் மட்டும் கேள்விக்குறியுடன் முடித்து இருந்தது. இதேபோன்று இன்று வெளியான டிரைலரில் கூட அஜித் கேரக்டர் பெயர் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. இதனால் துணிவு திரைப்படத்தில் அஜித்துக்கு கேரக்டர் பெயரை இல்லாமல் புதிய யுத்தியை இயக்குனர் வினோத் கடைப்பிடித்து இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

அப்படி நடக்கும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக முன்னணி நடிகர் ஒருவர் கேரக்டர் பெயர் இல்லாமலே நடித்து இருக்கிறார் என்று பெருமை துணிவுக்கு சேரும். விஜய், அஜித் போன்ற சூப்பர் ஸ்டாரின் படங்களை பொறுத்தவரை அவர்களது ரசிகர்களை திருப்திப்படுத்தினாலே படம் போட்ட காசை எடுத்து விடும். அந்த வகையில் துணிவை அஜித் ரசிகர்கள் எந்த விதத்திலும் விட்டுத்தர மாட்டார்கள்.

Most Popular