Sunday, November 17, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் அரசியல் கட்சி தொடக்கம்..பல ஆண்டுக்கு முன்பே கருத்து சொன்ன அஜித்

விஜய் அரசியல் கட்சி தொடக்கம்..பல ஆண்டுக்கு முன்பே கருத்து சொன்ன அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். மேலும் இனி ஒப்புக்கொண்ட படத்தை நடித்து முடித்துவிட்டு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விடுவேன் என்றும் அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது விஜய் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தினாலும் அவர் அரசியலுக்கு வருவது ஒரு தரப்பினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் நடிகர்கள் அரசியல் கட்சியை தொடங்குவது குறித்து நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்கு முன்பே அளித்துள்ள பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதில் நடிகர் அஜித்திடம் காமெடி நடிகரான சந்தானம் உங்களிடம் இவ்வளவு படைபலம் இருக்கிறது. நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த அஜித் என்னுடைய ரசிகர்களை நான் என்னுடைய சுயநலத்திற்கு என்றுமே பயன்படுத்த மாட்டேன். அவரவர் வாழ்க்கையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். எப்போதுமே ஒரு தலைவர் என்பவர் நாட்டு மக்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று அனைவரும் அரசியலுக்கு வந்தால் என்ன செய்வது. அது நியாயமாக இருக்காது.

- Advertisement -

மக்கள் தங்களுடைய கடமையை சரியாக செய்தாலே நாடு தன்னால் முன்னேறி விடும். நாம் அரசியல் கட்சிகளை குறை சொல்கிறோம் ஐஏஎஸ் அதிகாரிகளை பழி சுமத்துகிறோம். நாம் யாரையாவது ஒருவர் மீது குறை சொல்லி கொண்டே தான் இருக்கிறோம்.

- Advertisement -

ஆனால் நமது கடமையை நாம் சரியாக செய்கிறோமா? என்று யோசித்துப் பார்த்தால் நிச்சயமாக செய்வதில்லை. அவர்கள் அவர்கள் பணியை சரியாக செய்தாலே நாடு தன்னால் முன்னேறி விடும்.உலகம் முழுவதும் உரிமை போராட்டம் நடைபெறுகிறது.

உரிமையைப் பற்றி நாம் பேசுகிறோமே தவிர கடமையைப் பற்றி நாம் யாராவது பேசுகிறோமா? மக்கள் நம்மை நாமே குறை சொல்லிக்கொள்ள வேண்டும். நான் பேசுவது சில நேரம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதனால் நான் இதைப் பற்றி பேசவில்லை. ஆனால் என்னிடம் அதிக கேள்விகள் இதுதான் கேட்கப்படுவதாக நடிகர் அஜித் விளக்கம் அளித்து இருந்தார்

Most Popular