Thursday, May 16, 2024
- Advertisement -
Homeசினிமாபிக் பாஸ் பிரபலத்துடன் இணையும் அஜித்தின் மகள்

பிக் பாஸ் பிரபலத்துடன் இணையும் அஜித்தின் மகள்

பிக் பாஸ் சீசன் 3 இல் பிரபலமானவர் முகேஷ் ராவ். இவர் மலேசிய நாட்டை சேர்ந்தவர். இவர் பங்குபெற்ற பிக்பாஸ் சீசன் 3யின் டைட்டில் வின்னர் ஆக வெற்றி அடைந்தார். இவர் பிக் பாஸில் இருக்கும் பொழுதே தன் நண்பர்களுடன் இணைந்து நிறைய பாடல்களை எழுதி பாடுவார்.

- Advertisement -

சத்தியமா நான் சொல்லுறேன் டி என்ற பாடல் பெருமளவில் வைரலானது அந்தப் பாடலை அவர் பிக் பாஸ் ஐ விட்டு வெளியில் வந்த பிறகு முழுமையாக பாடி ஆல்பம் போல வெளியிட்டார். அதற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

தற்பொழுது கூட ஒத்த தாமரை என்ற ஒரு பாடலை இயற்றி வெளியிட்டிருந்தார். இதில் ரசிகர்கள் பெரும் அளவில் கவரப்பட்டு நிறைய ரீல்ஸ்களும் வெளியிட்டார்கள். இப்படி ரசிகர்களுக்கு பிரபலமான முகின் ராவ் இயக்குனர் கவினின் இயக்கத்தில் வேலன் என்று ஒரு திரைப்படம் நடித்திருந்தார் .

- Advertisement -

திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது .இந்த திரைப்படத்தில் முகின் ராவுடன் இணைந்து சூரி, பிரபு, மீனாட்சி விகிதா,தம்பி ராமையா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். ஒரு ஆக்சன் டிராமா திரைப்படம் ஆகும். ஆனால் இந்தத் திரைப்படம் அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை.

- Advertisement -

இதைத்தொடர்ந்து தற்பொழுது அதே இயக்குனர் கவின் உடன் முகின் ராவ் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் விசுவாசம் என்னை அறிந்தால் போன்று திரைப்படங்களில் தல அஜித்திற்கு மகளாக நடித்திருக்கும் அனிகா சுரேந்தர் திரைப்படத்தின் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

சின்னத்திரை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான அனிகா சுரேந்தர் தற்பொழுது கதாநாயகி ஆகும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்.தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மூன்று மொழிகள் இன்னும் தற்பொழுது அனிகா சுரேந்தர் நடித்து வருகிறார் .தெலுங்கில் இந்த ஆண்டு புத்தபொம்மா என்ற திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா சுரேந்தர் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது

Most Popular