சினிமா

அஜித்தின் ரீல் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்.. வயசுக்கு தகுந்த மாதிரி பேசுங்க

நடிகர் அஜித்தின் ரீல் மகளாக அறியப்படுபவர் அனிக்கா சுரேந்திரன். என்னை அறிந்தால் விசுவாசம் போன்ற படங்களில் அஜித் மகளாக நடித்திருக்கிறார். இதனால் அணிக்காவை அஜித்தின் மகளாகவே ரசிகர்கள் கருதுகிறார்கள். அனிக்கா சுரேந்திரன் தன்னுடைய வயதுக்கு மீறி பல்வேறு புகைப்படங்களை கவர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

Advertisement

இதனால் நிறைய பேர் அனிக்காவிற்கு அறிவுரை கூறி  வருகிறார்கள். தற்போது அவருக்கு 18 வயதாகி இருக்கிறது. எனினும் அவரை ரசிகர்கள் பேபி அனிக்காவாகவே பார்க்கிறார்கள். இனி நான் பேபி கிடையாது என அவரே பலமுறை கூறியிருக்கிறார். இந்த நிலையில் பேபி அனிக்காவின் பேட்டி ஒன்று தற்போது அஜித் ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளது.

அதில் இரண்டில் எது பிடிக்கும் என்ற ரவுண்டில் கேள்வி கேட்கப்படுகிறது. அதில் முக்கிய கேள்வியாக உங்களுக்கு பீர் பிடிக்குமா ஒயின் பிடிக்குமா என கேட்கப்பட்டது. அதற்கு முதலில் இந்த கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். நான் வயதில் சின்னவள். அது குடிக்கும் வயது எனக்கு கிடையாது என்று பதில் அளித்து ,பிறகு எனக்கு ஒயின் தான் பிடிக்கும் என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

Advertisement

இது அஜித் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. சிறிய வயதில் ஒயின் பிடிக்கும் என கூறுவது சரியா என அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து அவரிடம் பல கேள்வி கேட்கப்பட்டது. அதில் உங்களுக்கு இசை பிடிக்குமா? நடனம் பிடிக்குமா என கேட்கப்பட்டதற்கு எனக்கு இசை தான் பிடிக்கும் என அவர் பதில் அளித்தார்.

இதேபோன்று புத்தகமா சினிமாவா என கேட்கப்பட்டதற்கு புத்தகம் என்று கூறிய அனிக்கா லாங் ஹேர் பிடிக்குமா ஷார்ட் ஹேர் பிடிக்குமா கேள்விக்கு ஷார்ட் ஹேர் என பதில் அளித்தார் .இதேபோன்று ஹீல்ஸ் செப்பல் பிடிக்குமா பிளாட் செப்பல் பிடிக்குமா என கேட்கப்பட்டதற்கு அவர் ஹீல்ஸ் என கூறியுள்ளார்.
காலையில் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்களா இரவில் சுறுசுறுப்பாக இருப்பீர்களா என கேட்கப்பட்டதற்கு இரவு என்று அவர் கூறியுள்ளார்.

மலை பிடிக்குமா கடற்கரை பிடிக்குமா? என கேட்டதற்கு கடற்கரை தான் பிடிக்கும் என அணிக்கா கூறியுள்ளார். படங்கள் பிடிக்குமா வெப் சீரிஸ் பிடிக்குமா? என கேட்டதற்கு வெப்சைட் தான் பிடிக்கும் என்று கூறிய அவர், ஆன்லைனில் ஷாப்பிங் செய்வீர்களா இல்லை கடைக்கு நேராக சென்றது ஷாப்பிங் செய்வீர்களா என கேட்டதற்கு கடையில் தான் நேராக செல்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று வீடியோ காலில் பேச பிடிக்குமா சாட்டிங் பேச பிடிக்குமா என கேட்டதற்கு வீடியோ காலில் தான் பேசுவேன் எனும் அவர் கூறியுள்ளார் . டீயா, காபியா என கேள்வி கேட்டதற்கு காபி தான் பிடிக்கும் எனும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top