Wednesday, October 16, 2024
- Advertisement -
Homeசினிமாதந்தை போலவே மகன்.. கால்பந்து பயிற்சிக்கு செல்லும் அஜித் மகன் ஆத்விக்

தந்தை போலவே மகன்.. கால்பந்து பயிற்சிக்கு செல்லும் அஜித் மகன் ஆத்விக்

நடிகர் அஜித் சினிமாவைத் தாண்டி பல்வேறு துறைகளில் தன்னுடைய கனவை நிறைவேற்றி வருகிறார். இந்த நிலையில் அஜித் தன்னுடைய மகனையும் அவரைப் போலவே வளர்த்து வருகிறார்.

- Advertisement -

தந்தை எட்டடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்கிறார் என்ற பழமொழிக்கு ஏற்ப நடிகர் அஜித்தின் மகனான ஆத்விக் தற்போது கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அஜித்தின் மகன் ஆத்விக் விளையாட்டுத்துறையில் மிகவும் ஆர்வம் உள்ள சிறுவனாக இருக்கிறார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் ஐபிஎல் போட்டிகளை நேரில் சென்று நடிகர் அஜித் மகன் ஆதிக் பார்க்கிறார். இதேபோன்று அஜித்தின் மகனுக்கு கால்பந்து மீது மிகவும் ஆர்வம் இருக்கிறதாம். ஐ எஸ் எல் கால்பந்தத் தொடரில் சென்னை அணி விளையாடும் அனைத்து போட்டியையும் நேரு மைதானத்தில் தாய் ஷாலினியுடன் அஜித் மகன் ஆதிக் சென்று பார்த்திருக்கிறார்.

- Advertisement -

அஜித் மகனின் ஆர்வத்தை பார்த்து சென்னை அணியின் உரிமையாளரில் ஒருவரான அபிஷேக் பச்சன் அஜித்தின் மகனுக்கு அணியின் ஜெர்சியை பரிசாக வழங்கியிருந்தார்.இந்த நிலையில் சென்னையில் கால்பந்து பயிற்சிக்காகவே ஒரு தனி பிரம்மாண்ட மைதானம் மற்றும் பல்வேறு வசதிகள் அடங்கி கிளப் அமைந்திருக்கிறது.

இதில் தற்போது நடிகர் அஜித்தின் மகன் பயிற்சி செய்து வருகிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனை வைத்து பிகில் விஜய் போல் தல மகன் கால்பந்து விளையாடுகிறார் என்று பாராட்டி வருகின்றனர்.

ஒரு சிலர் மகனுக்கு பிடித்ததை ஒரு தந்தையாக பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து அஜித் தனது கடமையை நிறைவேற்றுவதாகவும் பாராட்டுகிறார்கள்.

Most Popular