Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாதீபாவளிக்கும் அஜித் vs விஜய் மோதல்.. தல போட்ட கட்டளை

தீபாவளிக்கும் அஜித் vs விஜய் மோதல்.. தல போட்ட கட்டளை

- Advertisement -

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது விஜய் என்று தற்போது பலரும் பேசி வருவது யாருக்கு பிடித்திருக்கும் இல்லையோ அஜித்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என தெரிகிறது. விஜயின் படம் அதிக வசூல் குவிப்பதால் போட்டிக்கு தனது படத்தை ரெடி செய்ய வேண்டும் என்று முடிவில் தற்போது அஜித் குதித்துள்ளார். துணிவு திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில் வேண்டும் என்றே சுற்றுலா சென்ற அஜித், படத்தை தாமதப்படுத்தினார்.

எனினும் டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யலாம் என இருந்த படத்தை பொங்கலுக்கு வாரிசு உடன் அஜித் மோத விரும்பினார். இதற்காக ரெட் ஜெயின்ஸ் நிறுவனத்திடம் துணிவு படத்தை விற்று அதிக திரையரங்குகளை பிடிக்குமாறு அஜித் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் வாரிசு படத்தின் வசூலை முறியடித்து விஜய்க்கு எந்த வகையிலும் நான் குறைந்தவன் அல்ல என்று நிரூபிக்க அஜித் முடிவு எடுத்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் விஜயின் அடுத்த படமான தளபதி 67 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. தற்போது மீண்டும் தனது படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய கூறி அஜித் பிடிவாதமாக இருக்கிறார். தளபதி 67 படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கிய நிலையில் விக்னேஷ் சிவன் படத்தை வரும் தீபாவளிக்குள் முடித்துக் கொடுக்கும்படி அஜித் கூறி இருக்கிறார். இதனால் வரும் 17ஆம் தேதி அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

- Advertisement -

இதில் முக்கியமான சீன்களை மட்டுமே அஜீத் நடிக்க உள்ளார்.மற்ற முக்கியமான காட்சிகளை வினோத் போல் டூப் நடிகரை வைத்து விக்னேஷ் அவன் சரி கட்ட இருக்கிறார்.  தளபதி 67 படத்தை மே மாதத்திலே முடிக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜுக்கு அதிக படங்கள் வரிசையில் காத்திருப்பதால் படத்தை விரைவாக முடித்து அடுத்த படத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி மே மாதத்தில் தயாராகி விடும் என்று கோலிவுட் வட்டாரங்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளன.

Most Popular