சினிமா உலகில் கதாநாயகன்களாக உலா வந்த நடிகர்கள் எல்லாம் நிஜ வாழ்விலும் ஹீரோக்கள் ஆவதில்லை. ஆனால் தல தளபதி சூர்யா போன்ற நடிகர்களை ரசிகர்கள் நிஜ வாழ்விலும் ஹீரோக்களாக தான் பார்க்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய மனைவிமார்கள் என்று கூட சொல்லலாம்.
சூர்யா ஜோதிகா ,அஜித் ஷாலினி, விஜய் சங்கீதா இப்படி ஜோடி ஜோடியாக அவர்களை பெயரை உச்சரிக்கும் பொழுதே அவர்களின் மீது ஒரு கண்ணியமும் மரியாதையும் ஏற்படுகிறது.
எல்லாம் ஒரு புறம் இருக்க தல அஜித்தின் மனைவி ஷாலினி 90 திரைப்படங்களில் முதன்மையான நடிகர்களும் ஒருவர் ஆவார்.
அமர்க்களம் போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்த அஜித் மற்றும் ஷாலினி நாளடைவில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுடைய காதல் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்பட கூடியவையாக இருக்கிறது.
நடிகை ஷாலினி ,குழந்தை நட்சத்திரமாக இருக்கும் பொழுதிலிருந்து நடித்துக் கொண்டிருந்தார். இவருக்கு ஷாமிலி ரிச்சர்ட் ரிஷி என்ற சகோதர சகோதரிகள் இருந்தார்கள். இவர்கள் இருவருமே நடிகை ஷாலினிக்கு இளையவர்கள் தான். நடிகை ஷாமிலியை அனைவருக்கும் தெரியும் காரணம். அவர் அஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமடைந்தவர்.
ஆனால் அவர் கதாநாயகியாக வீரசிவாஜி என்ற ஒரே திரைப்படத்தில் மட்டும் தான் நடித்து இருக்கிறார். மேலும் பெரிதாக அவர் எந்த திரைப்படத்திலும் ஆர்வம் காட்டவும் இல்லை. அவர் அவ்வளவு பிரபலம் அடையவும் இல்லை. ஆனால் நடிகை ஷாலினியின் தம்பி ரிச்சர்ட் ரிஷி பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளிவந்த திரௌபதி என்ற திரைப்படத்தில் தான் ரிச்சர்ட் நடித்திருக்கிறார். அந்தத் திரைப்படம் எதிர்மறையான விமர்சனத்தை தான் பெற்றது. இவ்விமர்சன ரீதியாக தான் இவர் அந்த திரைப்படத்தின் மூலம் சற்று பிரபலம் அடைந்தார்.
இதேபோல் 2021 ஆம் ஆண்டு ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்திலும் ரிச்சர்ட் ரிஷி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தையும் மோகன் ஜி தான் இயக்கியிருந்தார். என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படம் ஜாதியை பற்றி பேசி எடுக்கப்பட்டவை ஆகும் இதுவும் இவரை பிரபலப்படுத்தவில்லை.
இப்படி இருந்த ரிச்சர்ட் ரிஷி தன் சொந்த வாழ்வில் கண்ணதாசனின் பேத்தியான சத்தியலட்சுமி காதலித்து வந்தார். சத்திய லட்சுமியின் தந்தையும் ஷாலினியின் தந்தையும் குடும்ப நண்பர்கள் என்பதால் இருவருக்கும் பெரியவர்களால் 2012 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
அதற்குப் பிறகும் இருவரும் பழகும் நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணம் நின்று விட்டதாக கூறப்படுகிறது. ஏறத்தாழ பத்து வருடங்களை தாண்டியும் இந்த சோகத்தில் தான் இதுவரை யாரையும் காதலிக்காமல் சிங்கிளாகவே இருந்திருக்கிறார்.
ரிச்சர்ட் ரிஷி ஆனால்
தற்பொழுது இந்த சோகத்தை எல்லாம் மறந்து பிக்பாஸில் மூலம் பிரபலமான நடிகை யாஷிகாவின் உடன் காதல் வயப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அதை உறுதி செய்யும் விதமாக நடிகை யாஷிகா ரிச்சர்ட் ரிஷிக்கு முத்தமிடுவது போன்ற ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
ரிச்சர்ட் ரிசி இயல்பாக இவர்கள் பழகும் புகைப்படத்தையும் கூடுதலாக வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் இவர்கள் இருவரும் காதலர்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.