சினிமா

ஈபிள் டவர் முன் மாஸ் காட்டிய அஜித் ! ரசிகர்களின் சட்டையில் ஆட்டோகிராப் – வீடியோ இணைப்பு

Ajithkumar gives his autograph in fan tshirt at paris

தல 61 திரைப்படத்திற்காக நடிகர் அஜித் ஐரோப்பா ஐரோப்பிய கண்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வித்தியாசமான நீண்ட தாடி கோட் சூட் கண்ணாடி என கலக்கி வரும் அஜித் பைக் ரெய்டு செல்வது, கடைக்கு சாதாரணமாக செல்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.அண்மையில் நடிகர் அஜித் லண்டனில் கடை ஒன்றுக்கு சென்று வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது நடிகர் அஜித் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்க்கு சென்றுள்ளார்.

நடிகர் அஜித் கோட் சூட் போட்டு அதே லுக்கடன் ஈபில் டவர் முன் அந்த வீடியோவில் நின்று கொண்டு உள்ளார். அப்போது நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் சுற்றி ஆரவாரத்துடன் இருந்தனர் . தமிழகத்தில் கடந்த ஆண்டு தேர்தலின் போது நடிகர் அஜித்திடம் செல்ஃபி எடுக்க முயன்ற போது போனை அஜித் புடுங்கி கொண்ட சம்பவம் அனைவருக்கும் நினைவிருக்கலாம். ஆனால் பாரிஸில் அவர் நடந்து கொண்ட விதம் அனைவரையும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

Advertisement

பாரிஸ் ரசிகர் ஒருவர் தன்னுடைய டி-ஷர்டில் அஜித்தை கையெழுத்திடுமாறு கேட்டுக் கொண்டார் . அதற்கு அஜித்தும் அவருடைய பேனாவை வாங்கி டீசர்டில் கையெழுத்து போட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இதே போல் அங்கு சுற்றி நின்ற ரசிகர்கள் அஜித்திடம் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அஜித் ஒருவருக்கு பின் ஒருவராக அனைவருக்கும் செல்பி எடுத்து கொடுத்தார். அஜித்தின் வருகையால் ஈபில் டவர் சுற்றுலா தளம் கோலாகலமாக மாறியது .

அஜித் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்த வாரம் சென்னைக்கு திரும்ப உள்ளார். சென்னையில் எஞ்சி உள்ள திரைப்படம் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஏகே 61 திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது .ஒருவேளை படத்தின் வேலை முடியாவிட்டால் டிசம்பர் மாதம் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது. பொங்கலுக்கு தளபதி விஜயின் வாரிசு வருவதால் அந்த திரைப்படத்துடன் அஜித் திரைப்படம் வெளியாகுமா என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்தது. இதனால் ஏகே 61 திரைப்படத்தை எச் வினோத் செதுக்கி வருகிறார். அஜித்தின் மாறுபட்ட தோற்றமும் இந்த படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்து உள்ளது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top