அல்டிமேட் ஸ்டார் மற்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அஜித்குமார் நடிப்புக்கு மட்டுமல்ல அவரது குணதிற்கும் மக்களின் பாராட்டுக்களை பெற்றவர். 1993ஆம் ஆண்டு சினிமாவுக்குள் நுழைந்த அவர் இன்று கோலிவுட்டில் தனக்கென்று ஓர் ராஜ்யத்தை காட்டியுள்ளார். இருப்பினும் தன் பெயரில் ரசிகர் மன்றம் வேண்டாம் எனக் கூறி அதை மங்காத்தா படத்தின் போது களைத்தார்.
துவக்கத்தில் இருந்தே ரசிகர்களை அவரது பணிகளில் கவனம் செலுத்துமாறும் நேரம் கிடைத்தால் தன் படத்தை பார்த்தால் போதும் என்றும் அறிவுறுத்திக் கொண்டே இருந்தார் அஜித்குமார். மற்ற சில நடிகர்கள் ரசிகர் மன்றம் மூலம் விளம்பரத்தைத் தேடிக் கொள்ளும் கூட்டத்தில் அவர் அனைத்தையும் தூக்கி வீசினார்.
ரசிகர் மன்றம் மூலம் சூர்யா, விஜய் மக்களுக்கு உதவி செய்கின்றனர். ஆனால் அஜித் அது ஏதும் இன்றி தன்னிடம் உதவி எனக் கேட்கும் பலருக்கும் ஊழியர்கள் பலருக்கும் உதவி செய்து வருகிறார். அவர் செய்த உதவிகளில் பல மீடியா வரை வராமல் போய் இருக்கிறது என ராதா ரவி நேர்க்கானல் ஒன்றில் கூட சொன்னார்.
ஏர்போர்ட்டில் உதவிய அஜித்
லண்டனில் இருந்து சென்னை வரை கைக் குழந்தையுடன் தனியாக வந்த தன் மனைவிக்கு உதவிய அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார் அந்தப் பெண்ணின் கணவர். “ கிளாஸ்கோவில் இருந்து சென்னை திரும்பிய என் மனைவிக்கு லண்டன் ஏர்போர்ட்டில் நடிகர் அஜித்குமாரைப் பார்க்க வாய்புக் கிடைத்தது. இந்த நல்ல மனிதர் போட்டோவுக்கு மட்டும் போஸ் கொடுக்கவில்லை சூப்பர் மனிதராக தனியாக வந்த என் மனைவிக்கு உதவினார். ” என்றார்.
மேலும் உதவியை மறுத்த என் மனைவியிடம் “ பரவாயில்லை. எனக்கும் இரண்டும் குழந்தைகள் இருக்கின்றன, உன் கஷ்டம் எனக்கு புரிகிறது. நான் உதவி செய்கிறேன். ” எனக் கூறி விமானம் வரை அஜித்தே அவரது சூட்கேஸுடன் குழந்தை பையையும் சுமந்து சென்றார் என அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அஜித்துக்கு துணையாக பயணிந்த நபர், “ தலைவா நீங்க எதுக்கு தூக்கிட்டு வரீங்க கொடுங்கள் நான் எடுதுக்குறேன். ” எனக் கூறியவரிடமும் “ பரவாயில்லை ” என மறுத்து அவரே தூக்கிச் சென்று அந்தப் பெண்ணின் இருக்கையில் சரியாக சேர்த்தார்.
— LetsCinema (@letscinema) April 14, 2023
அஜித்தின் இந்த பணிவான குணத்தை அடுத்தவர்களிடம் காட்டுவது புதிதல்ல. அவரின் ரசிகர்கள் இதை சமூக வலைதளங்களில் “ என்னுடைய ரோல் மாடல். இவரைப் போல உதவி செய்து வாழ வேண்டும். ” என குறிப்பிட்டு ஷேர் செய்து வருகின்றனர்.