அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் ஜனவரி மாதம் வெளியான துணிவு திரைப்படத்திற்கு பின்னர் படத்தில் நடிக்கவில்லை. விக்னேஷ் சிவன் படம் நடக்காமல் போக அடுத்து மகிழ் திருமேனியுடன் கைக்கோர்த்துள்ளார். கடந்த 10 மாதங்களாக பைக் பயனங்களில் ஈடுபட்டு இருந்த அஜித் தற்போது தன் 62வது படத்தில் நடிக்க துபாய் புறப்பட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் விடாமுயற்சி படமே ரத்து ஆகப் போகிறது என வதந்திகள் பரவிய நிலையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் செப்டம்பர் மாதம் அதனைப் பொய் எனக் கூறி அஜித் ரசிகர்கள் மத்தியில் புன்னகையை உண்டாக்கினார். கடந்த மாதம் அஜித் மற்றும் படக்குழு அஜர்பைஜானுக்கு கிளம்பினர். முக்கால்வாசி படம் அங்கு தான் ஷூட் செய்யப்பவுள்ளது.
இதுவரை விடாமுயற்சி படக்குழுவிடம் இருந்து பட அறிவிப்பு போஸ்டர் தவிர எதுவுமே வெளியாகவில்லை. அஜித் ரசிகர்களும் வலிமை படத்திற்கு செய்தது போல இதற்கும் செய்யாமல் அமைதியாக இருக்கின்றனர். அஜித் ஒரு பக்கம் குடும்பம், பைக் மற்றொரு பக்கம் அவ்வப்போது படம் என தன் வாழ்கையை ஈசியாக வாழ்ந்து வருகிறார்.
இருப்பினும் அஜித் ரசிகர்கள் ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட்டுக்காக அமைதியாக காத்திருக்கின்றனர். படகுக்குழு தற்போது தான் படப்பிடிப்பை துவங்கி இருப்பதால் முதல் அப்டேட் வெளியாக எப்படியும் இன்னும் 60 நாட்கள் பக்கம் ஆகிவிடும். அஜித்தின் இந்தப் படத்தில் ஒரு பெரிய நட்சத்திர குழுவே இணைத்துள்ளது.
நாயகியாக திரிஷா மற்றும் வில்லனாக அர்ஜுன் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இது தவிர ஆரவ் மற்றும் பிரியா பவானி ஷங்கரும் இடம்பெற்றுள்ளனர். அனைத்தும் அதிகாரப்பூர்வமாக இன்னும் கொஞ்ச நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகள் கழித்து அனிருத் அஜித்துக்காக இசையமைக்கிறார்.
அஜர்பைஜானில் படக்குழு ஷூட்டிங் செய்துக் கொண்டிருந்த வேளையில் கலை இயக்குனர் மிலான் ஹார்ட் அட்டாக் உயிரிழந்தார். இது பெரிய சோகத்தை உண்டாக்கியது. படம் தடைபடாமல் செல்ல மிலானின் மனைவி தற்போது விடாமுயற்சி படத்திற்கு கலை இயக்குனராக சேர்ந்துள்ளார்.
அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் அஜித் முழுக்க வெள்ளை முடி கொண்ட கெட்டப்பில் இருந்தார். துணிவு படத்திலும் அவ்வாறு காணப்பட்டதால் இதிலும் அப்படியே நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. மங்காத்தா முதலே சால்ட் & பெப்பர் லுக்கில் காணப்பட்ட அஜித் சமீபத்திய படங்களில் முழுவதுமாகவே வெள்ளை முடிக்குத் தாவியுள்ளார். இந்த லுக்கிலும் கிளாசியாக காணப்படுகிறார்.