Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமா13 ஆண்டுகளுக்குப் பின் அஜித் செய்யப் போகும் சம்பவம்.. ! விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்.. !

13 ஆண்டுகளுக்குப் பின் அஜித் செய்யப் போகும் சம்பவம்.. ! விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்.. !

அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் தயாராகும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். துணிவு படத்தின் அமர்க்களமான வெற்றிக்குப் பின் அவரது அடுத்த படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இல்லை.

- Advertisement -

அஜித் 62 – மகிழ் திருமேனி

துணிவு படத்திற்கு பின் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவனுடன் இணையவிருந்த அஜித், திரைக்கதையில் ஏற்பட்ட சிக்கலால் பிராஜக்ட்டை கைவிட்டார். அதனைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தை உறுதி செய்தார்.

விடாமுயற்சி ஷூட்டிங்கில் சிக்கல்

வலிமை, துணிவு படங்களின் போதே அஜித்குமார் தன் கனவான உலகம் சுற்றுதலை தொடங்கிவிட்டார். இச்சுற்றுதலின் முதல் கட்ட அட்டவணையை அவர் முடித்துவிட்டார். கடந்த 8ஆம் தேதி வெளிநாட்டில் இருந்தும் சென்னை திரும்பிவிட்டார். ஆனாலும் நினைத்தவாறு படத்தை துவங்க முடியவில்லை.

- Advertisement -

மே கடைசி வாரம் பூஜையுடன் ஷூட்டிங்கை துவங்க திட்டமிருந்த படக்குழு, திடீரென நடந்த அமலாக்கத் துறை சோதனையால் தாமதம் ஆனது. இடையில் அஜித் வேறு நிறுவனத்துடன் படம் செய்யப்போவதாக வதந்திகளும் பரவின. ஆனால் அவர் ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கியதால் மாறுவதற்கு வாய்ப்பே இல்லை.

- Advertisement -

விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்

தன் இரண்டாம் கட்ட உலகம் சுற்றுதலை நவம்பர் மாதம் அஜித் தொடரவிருக்கிறார். அதனால் அதற்குள் படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் வெளிநாட்டில் எடுத்த அஜித்தின் புகைப்படங்களில் அஜித் தன் உடல் எடையைக் குறைத்து மிகவும் ஃபிட்டாக காணப்பட்டார். அதனைக் கண்டு ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.

மேலும் இந்தப் படத்தில் அஜித் 13 வருடங்களுக்குப் பிறகு இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கிறார். கடைசியாக இரட்டை வேடத்தில் ‘ அசல் ’ படத்தில் வந்தார். வாலி படத்தில் காட்டிய இரட்டை வேட நடிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தில் அருண் விஜய், அர்ஜுன் தாஸ் ஆகியோர் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அப்படியானால் மகிழ் திருமேனியிடம் பெரிய அளவில் எதிர்பார்க்கலாம்.

Most Popular