கோலிவுட் நாயகன் மற்றும் ரசிகர்கள் பாசமாக அழைக்கும் தல அஜித்குமாருக்கு நடிப்பைத் தவிர பைக் ரேஸில், ஃபார்முலா 2, சமைத்தல், ஏரோ மாடலிங் என பல திறன்களைக் கொண்டவர். சினிமாவைத் தாண்டி தனக்கென ஓர் குடும்பம் இருப்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு அவ்வப்போது அவர்களுக்கு நேரம் ஒதுக்கிகுறார். குறிப்பாக கொரோனா காலத்திற்கு பின் அவரை குடும்பத்துடன் அதிகமாக காணப்படுகிறது.
திரைப்படங்களுக்கு இடையே அவரது கனவான உலகம் சுற்றுதலையும் மேற்கொள்கிறார். கடந்த 2 திரைப்படங்களுக்கு இடையே அவர் பல நாடுகளுக்கு சென்ற புகைப்படங்கள் வைரலாகியது. அதைக் கண்ட ரசிகர்கள், இல்லை இல்லை அனைத்து தரப்பினரும் “ வாழ்கையை அஜித்குமாரைப் போல் வாழ வேண்டும் ” என்றெல்லாம் பேசினர். சமூக வலைதளங்களில் ‘ வாழா என் வாழ்வை வாழவே ’ என ட்ரெண்ட் செய்தனர்.
வலிமை திரைப்படத்தின் போது இதைத் துவங்கிய அவர் தொடந்து துணிவு படத்தின் ஷூட்டிங்க்கு இடையேயும் மேற்கொண்டார். உலகம் சுற்றுதலின் முதல் பாதியில் இந்தியா முழுக்க அனைத்து மாநிலத்தையும் அவரது இரு சக்கர வாகனத்தில் சுற்றினார். சென்ற டிசம்பர் 16,2022 தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா இதை டிவிட்டரில் பதிவிட்டு நெகிழ்ந்தார்.
அடுத்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி துணிவு படத்தின் அமோக வெற்றிக்கு பின் உடனடியாக அடுத்த பாதியை தொடராமல் லைகா நிறுவனம் தயாரிக்கும் தன் அடுத்த படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க காத்திருந்தார். போதிய நேரத்திற்குள் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஸ்கிரிப்டை முடிக்காததால் அது கைவிடப்பட்டு தற்போது அவரது இடத்தை மகிழ் திருமேனி நிறப்பியுள்ளார். படப்பிடிப்பு மார்ச் கடைசி வாரத்தில் துவங்கவிருக்கும் நிலையில் அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வாரம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டிவிட்டரில் சுரேஷ் சந்திரா அஜித்குமாரின் உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்தின் அடுத்த சுற்றைப் பற்றியான் அறிவிப்பை வழங்கியுள்ளார். அதற்கு பரஸ்பர மரியாதை பயணம் எனப் பெயரிட்டுள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு தன் இரண்டாம் கட்ட உலக சுற்றுதலை தொடர்புள்ளார் அஜித்குமார். முன்னர் 18 மாதங்களில் 62 நாடுகள் பயணிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகின, ஆனால் தற்போது படங்களை கருத்தில் கொண்டே முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது.
— Suresh Chandra (@SureshChandraa) March 6, 2023