Wednesday, November 27, 2024
- Advertisement -
Homeசினிமாவிடாமுயற்சி கதை இது தான்.. கொஞ்சம் மிஸ் ஆனா காலி.. மங்காத்தா கூட்டணியை சரியாக பயன்படுத்துவாரா...

விடாமுயற்சி கதை இது தான்.. கொஞ்சம் மிஸ் ஆனா காலி.. மங்காத்தா கூட்டணியை சரியாக பயன்படுத்துவாரா மகிழ் திருமேனி ?

துணிவு – வாரிசு படங்கள் மோதியப் பிறகு விஜய் மிகப் பிரம்மாண்டமான படமான லியோவை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 படப் பணிகளை 40% நிறைவு செய்துவிட்டார். ஆனால் மறுபக்கம் அஜித்குமார் சினிமாவுக்கு அளிக்கும் நேரத்திற்கு இணங்க தன் பைக்குக்கும் குடும்பத்துக்கும் நேரத்தை கொடுக்கிறார்.

- Advertisement -

தொடக்கத்தில் ரசிகர்கள் அப்டேட் அப்டேட் என ஏங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் காலப் போக்கில் பழகி படம் வரும் போது கொண்டாடலாம் எனும் மனநிலைக்கு வந்துவிட்டனர். அஜ்ஜித்குமாரும் அதையே விரும்புவார். மகிழ் திருமேனி இயக்கத்தில் அண்மையில் அஜித் நடித்து வருகிறார்.

பெரும்பாலான ஷூட்டிங் அஜர்பைஜானில் நடக்கிறது. முதற் கட்ட ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பிய அஜித்குமார் இரு தினங்கள் கழித்து மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். விடாமுயற்சி எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

- Advertisement -

முழு வேகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். வில்லனாக அர்ஜுன் வருகிறார். பிளாக்பஸ்டர் மங்காத்தா படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

மேலும் ஆரவ், ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். விடாமுயற்சி திரைப்படம் ஹாலிவுட் படம் பிரேக்டவுன் (1997) கதையை தழுவி எடுக்கப்படுகிறது. இச்செய்தி எப்போதே கசிந்தது. ஆனால் இதற்கு முன் வெளியான புகைப்படங்கள் மற்றும் த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அதை உறுதிப்படுத்தியுள்ளது.

விடாமுயற்சி படத்தில் அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவியாக மலைகளுக்கு நடுவே பயணம் செய்கின்றனர். அப்போது அவர்களின் காரில் பிரச்சனை ஏற்பட்டு ரோட்டோரம் நிப்பாட்டப்படுகிறது. மெக்கானிக்கை நாடி திரிஷா வேறொரு வாகனத்தில் செல்கிறார். அது வில்லன் குழுவாக அமைய த்ரிஷாவைத் தேடி அஜித் எடுக்கும் முயற்சிகள் தான் விடாமுயற்சி.

இது போன்ற கதைகளை கையாளுவது மகிழ் திருமேனிக்கு மிகவும் சர்வ சாதாரணம். குறுகிய படமேன்பதால் விரைவில் ஷூட்டிங் முடிக்கப்பட்டு ஏப்ரல் மே மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். தளபதி 68 படமும் அந்த மாதத்தில் வருவதால் மீண்டும் ஓர் மோதலைக் காண நிறைய வாய்ப்புகள் உள்ளன.

Most Popular