Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாயாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் சென்று வயிறு குலுங்க குலுங்க சிரித்து படம் பார்துள்ள அஜித்குமார்.. !

யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் சென்று வயிறு குலுங்க குலுங்க சிரித்து படம் பார்துள்ள அஜித்குமார்.. !

நடிகர் அஜித் சினிமாவுக்கு வெளியில் சாதாரணமான மனிதராக நடமாட விரும்புபவர். ஆனால் அவரை வெளியில் பார்த்தால், ரசிகர்கள் சும்மா விடுவார்களா ? இது அஜித்துக்கு மட்டுமல்ல புகழ்பெற்ற நடிகர்கள் அனைவருக்கும் பொருந்தும். பொது வெளியில் அவ்வளவு சுலபமாக ரசிகர்கள் சூழாமல் நடமாட இயலாது.

- Advertisement -

ஒருமுறை அஜித் அவர்கள் யாருக்கும் தெரியாமல் மாரு வேடத்தில் தியேட்டருக்கு சென்று வயிறு குலுங்க குலுங்க படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார். இதனை அவருடன் 4 படங்களில் (அமர்க்களம், அட்டகாசம், காதல் மன்னன், அசல்) பயணித்த இயக்குனர் சரண் தெரிவித்துள்ளார்.

அதாவது மக்கள் யாரும் அஜித்தை கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக வேறு ஒரு வேடத்தில் தியேட்டருக்கு சென்று மிர்ச்சி சிவா நடிப்பில் அமுதன் இயக்கத்தில் வெளியான ‘ தமிழ்ப்படம் 1 ’ படத்தைப் பார்த்துள்ளார். நன்று சிரித்து மகிழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, படம் நிறைவு பெற கடைசி சில நிமிடங்கள் இருக்கும் போது வெளியே கிளம்பியுள்ளார்.

- Advertisement -

சிவாவின் தமிழ்ப்படம் தரமான காமெடிப் படம். இந்தப் படத்தைக் காணத் தான் அஜித்குமார் யாருக்கும் தெரியாமல் சென்றுள்ளார். அஜித்தின் குடும்பத்தினர் ஷாலினி மற்றும் அவரது பிள்ளைகள் தியேட்டர்களுக்கு சென்றால் பெரிய அளவில் கூட்டம் இருக்காது, ஒரு சிலர் புகைப்படங்கள் எடுப்பர்.

- Advertisement -

அஜித் தற்போது தன் குடும்பத்தினருடன் வெளிநாட்டில் நிம்மதியாக குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அதன் புகைப்படங்களை நாம் அடிக்கடி காண்கிறோம். பைக் டூர் மூலம் சினிமாவுக்கு வெளியில் தனது வாழ்கையை அவர் நிம்மதியாக செலவு செய்து வருகிறார். இடையில் ஒன்றரை ஆண்டுக்கு ஓர் படம்.

அஜித் மிகவும் கூலான நபர். சினிமா செட்களில் அனைவரிடமும் கலகலப்பாக பேசி நகைச்சுவைகள் கூட செய்வார். இதனை அவரது படங்களில் உடன் நடித்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் மங்காத்தா, பில்லா – 2 ஆகிய படங்களின் பிளூப்பர்களில் கூட காணலாம்.

Most Popular