Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாஏகே 62 படத்தின் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்விட் சர்பரைஸ்

ஏகே 62 படத்தின் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்விட் சர்பரைஸ்

அஜித் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படம் தான் ஏ கே 62 . நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் முடிந்து அவர் லியோ படத்தை தொடங்கி , அது முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் விஜய் தற்போது அதற்கு அடுத்த படத்துக்கு ரெடி ஆகி விட்டார்.

- Advertisement -

ஆனால் நடிகர் அஜித்தின் அடுத்த படம் தொடர்பாக எந்த அப்டேட்டும் வராமல் இருந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஏற்கனவே அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து அது கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் அஜித்தின் புதிய படத்தை இயக்குனர் மகிழ் திருமேனன் இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

படத்தின் பெயர் மற்றும் எப்போது தொடங்குகிறது என்பது குறித்தான அப்டேட் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.இதைப் போன்று அஜித்தின் ராசியான வி என்ற பெயரிலே படத்தின் பெயர் அமையும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

வெறும் போஸ்டர் மட்டும் இல்லாமல் மோஷன் போஸ்டர் ஆக அல்லது டீசராகவும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித்குமார் கேங்ஸ்டர் ஆக மீண்டும் நடித்து இருக்கிறார். விறுவிறுப்புக்கும் கதையில் ஆக்சன் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் வெளியேறிவிட்டார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர்தான் இந்த படத்தில் இசையமைக்க உள்ளார். வெறும் இந்த படத்தில் நடிகை மற்றும் மற்ற காப்பாத்திரங்கள் நடிக்கப் போகும் நடிகர்கள் தொடர்பான அறிவிப்பும் மே ஒன்றாம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் நடிகர் அஜித் தற்போது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடாமல் பைக்கில் நேபாளத்தில் பயணம் சென்ற வாரக் கொண்டாடுவார் என தெரிகிறது. இதனால் அஜித் இல்லாமலேயே படப்பிடிப்பு தொடங்கி நடைபெறும் என தெரிகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் பெரிய கேப்பை சினிமாவில் எடுக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாக உள்ளது.

Most Popular