சினிமா

விக்னேஷ் சிவன் அதிரடி நீக்கம்… ! அஜித் 62 படத்தை இயக்கப் போவது முருகதாஸா விஷ்ணு வர்தனா… !?

AK62 Vignesh Shivan Vishnu Vardhan Murugadoss

துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே அஜித்குமார் தனது 62வது படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தலைமையில் நடிக்கப்போவதாக அறீவ்த்துவிட்டார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முடிவு செய்தது. விக்னேஷ் சிவன் என்றால் இசைக்கு வழக்கம் போல அனிருத் தான். பல ஆண்டுகள் கழித்து அஜித் – அனிருத் காம்போவைக் காணவும், ஃபேன் பாய் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஓர் கூலான பீல் குட் படம் கிடைக்கும் என்ற ஆனந்தத்தில் ரசிகர்கள் இருந்தார்கள்.

ஆனால் அனைத்தும் தற்போது தவிடு பொடி ஆகிவிட்டது. விக்னேஷ் சிவன் – அஜித் கூட்டணியைக் காண ஏங்கிய ரசிகர்கள் அனைவரும் இந்த அறிவிப்பை ஓர் கனவாக நினைத்து மறந்திடுங்கள். ஆம், படம் கைவிடப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. படம் கைவிட மிக முக்கிய காரணம், விக்னேஷ் சிவன் இன்னும் ஸ்கிரிப்ட்டை முடிக்காததே !

Advertisement

படத்தின் அறிவிப்பு வெளியாகி கிட்ட தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் அவர் முதல் பணியையே செய்து முடிக்கவில்லையாம். அஜித் எனும் ஸ்டார் நடிகர் மற்றும் லைகா நிறுவனத்திடம் இது போன்ற காரணங்கள் சொல்லி கூடுதல் நேரம் வாங்குவது சாத்தியம்மிலாத ஒன்று. நேற்று லண்டனில் அஜித்குமார் – விக்னேஷ் சிவன் சந்தித்தது போல் புகைப்படங்கள் வெளியாகின. அங்கு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். உண்மையில் மிக மிகப் பெரிய வாய்ப்பை விக்னேஷ் சிவன் இழந்துவிட்டார். சில தினங்களுக்கு முன் இப்படத்தில் அஜித்துடன் ஐஷ்வர்யா ராய், அரவிந்த் சுவாமி, சந்தானம் என பெரிய பெரிய நடிகர்கள் இணைகிறார்கள் என்றெல்லாம் கூறினர், தற்போது அனைத்தும் காலி.

அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் 62,63,64 மூன்றையும் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. விக்னேஷ் சிவன் விலகும் நிலையில் அவ்விடத்தில் அடுத்து அமரப் போகும் இயக்குனர் யார் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. தற்போது வரை கிடைத்துள்ள செய்தி படி, ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது விஷ்ணு வர்தன் தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Advertisement

தீனா படத்தின் மூலம் தல என்ற பெயரை அஜித்துக்கு வங்கிக் தந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். மறுபக்கம் தல அஜித்தின் கேரியர் கம்பேக்குப் பின்னால் செயல்பட்ட பில்லா/ ஆரம்பம் இயக்குனர் விஷ்ணு வர்தனும் இப்போட்டியில் உள்ளார். விஷ்ணு வர்தன் – யுவன் ஷங்கர் ராஜா காம்போ வேன்றுமென பெரும்பாலான அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். யார் விக்னேஷ் சிவனின் இடத்தை நிரப்பப் போகிறார்கள் என இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top