சினிமா

புது விதமான சர்ச்சையில் சிக்கிய அக்சய் குமார்.. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் 2.0 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் அக்ஷய்குமார்.இவர் பாலிவுட் திரைப்படத்தின் முன்னணி நடிகராவார் தற்பொழுதைய காலகட்டத்தில் திரைப்படத்தில் கதாநாயகனாக வர்பவர்களை நிஜ வாழ்விலும் ஹீரோக்களாக ரசிகர்கள் நினைத்து வருகிறார்கள்.

Advertisement

சில ஹீரோக்கள் தான் நிஜ வாழ்விலும் ஹீரோக்களாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பல நிஜ வாழ்வில் ஹீரோக்களாக இருப்பது கிடையாதுபாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். பொதுவாக விளம்பர படங்களில் ஒரு முன்னணி நடிகர் வந்தால் அவர் கூறும் செய்தியை உண்மை என்று நம்பக்கூடிய உலகம் இது? அதனால் அப்படிப்பட்ட விளம்பர படங்கள் நடிக்க கூடியவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

அதை மறந்த நடிகர அக்ஷய்குமார் உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய போதைப் பொருளான பான் மசாலா விளம்பரத்தில் நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வாறான பொருட்களை தடை செய்ய வேண்டும். ஆனால் நடிகர் அக்ஷய்குமார் அதை ஆதரிக்கும் வகையில் அதை விளம்பரப்படுத்துவது கண்டிக்கத்தக்க செயல் என்று பல விமர்சனங்களுக்கு ஆளானார் நடிகர் அக்ஷய்குமார்.

Advertisement

இதன் பின் தன் தவறை உணர்ந்த நடிகர் அக்ஷய் குமார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அந்த விளம்பர படத்தில் இருந்து விலகினார். இனி அவ்வாறு நடிக்க மாட்டேன் என்றும் கூறினார். ஆனால் மீண்டும் புதிதாக ஒரு சர்ச்சையை சிக்கி இருக்கிறார் நடிகர் அக்ஷய்குமார்.

வருகின்ற மார்ச் மாதம் வட அமெரிக்காவிற்கு செல்ல இருக்கிறார் அக்சய் குமார்
  நியூ ஜெர்சி, ஒர்லாண்டோ, ஓக்லாந்து, ஆகிய இடங்களில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற இருக்கிறார். அதைப் பற்றிய புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் நடிகர் அக்ஷய்குமார். அந்தப் புகைப்படத்தில் செருப்பு அணிந்த காலோடு உலக உருண்டையில் இருக்கும் இந்திய வரைபடத்தில் நிற்பது போன்று புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. தேசபக்தி இருக்கும் யாராவது இப்படிப்பட்ட செயலை செய்வார்களா என்று பல விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார் நடிகர் அக்ஷய்குமார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top