Monday, November 4, 2024
- Advertisement -
Homeசினிமாஅல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்ட படத்தை இயக்கும் அட்லீ.. இது லிஸ்ட்லயே இல்லையே.. !

அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்ட படத்தை இயக்கும் அட்லீ.. இது லிஸ்ட்லயே இல்லையே.. !

இயக்குனர் அட்லீ தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமாகி விஜய்யை வைத்து மூன்று ப்ளாக்பஸ்ட்டர் படங்களைக் கொடுத்தார். கமர்ஷியல் படங்களை கையாளுவதில் சிறந்தவராக வலம் வந்த அட்லீ அடுத்ததாக பாலிவுட் பாட்ஷா ஷாரூக் கானை வைத்து ஜவான் படத்தின் மூலம் 1000 கோடிகள் வசூல் செய்து அங்கும் பெரிய இயக்குனராக முன்னேறினார்.

- Advertisement -

அடுத்ததாக மீண்டும் ஷாரூக் கானை வைத்து மற்றொரு பிரம்மாண்ட திரைப்படம் செய்ய திட்டம் இருப்பதாக கூறினார். இதில் தளபதி விஜய்யையும் சேர்க்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் இது அவரது ஆசையாக இருக்குமெனவே எதிர்பார்க்கப்படுகிறது. அட்லீ தன் அடுத்தப் படத்தை மற்றொரு பேன் இந்தியா ஸ்டாருடன் செய்யவிருக்கிறார்.

புஷ்பா படத்தின் மூலமாக வசூல் சாதனை புரிந்த அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ அடுத்தப் படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் உலா வருகின்றன. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முந்தைய படத்திலேயே அட்லீ – அல்லு அர்ஜுன் காம்போ கைக் கோர்க்க வேண்டியது.

- Advertisement -

ஜவான் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சஞ்சய் தத் செய்த கதாபாத்திரத்தை செய்ய முதலில் அட்லீ தளபதி விஜய்யிடம் சென்றார். அவரது முடியாத பட்சத்தில் அடுத்ததாக மும்பையில் அல்லு அர்ஜுனை சந்தித்து சிறிய கேமியோ ரோல் குறித்து விவரித்தார். கிட்டத்தட்ட அந்த ரோலை அல்லு அர்ஜூன் செய்ய வேண்டியது, இறுதியில் கைவிட்டுப் போனது.

- Advertisement -

அங்கு மிஸ்ஸானதை ஈடுகட்ட ஓர் முழு நீளப் படமே செய்கின்றனர். அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் இயக்குனர் திரிவிக்ரம் உடன் இணைவதாக ஓர் தகவலும் உள்ளது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அட்லீயின் மாஸான கமர்ஷியல் படங்களில் அல்லு அர்ஜுனைப் பார்க்க வேண்டுமென தெலுங்கு ரசிகர்கள் மிகவும் ஆசைப்படுகின்றனர். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Most Popular