Thursday, March 28, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் ரசிகர்கள் அதிர்ச்சி.. ஷாரூக்கான் படத்தில் விஜய் இல்லை.. அட்லி முடிவு

விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி.. ஷாரூக்கான் படத்தில் விஜய் இல்லை.. அட்லி முடிவு

- Advertisement -

தமிழ்நாட்டின் உச்ச நடிகராக விளங்கும் நடிகர் விஜய், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தனது மார்க்கெட்டை விரிவு படுத்தி வருகிறார். ஆனால் நடிகர் விஜயால் வட இந்திய மார்க்கெட்டை மட்டும் இன்னும் பிடிக்க முடியவில்லை. அவருடைய வாரிசு திரைப்படம் தற்போது 16 கோடி ரூபாய் வட மாநிலங்களில் வசூல் செய்தது. இது அவருடைய திரைப்பட வாழ்க்கையில் அதிகபட்ச தொகையாகும்.

இந்த நிலையில் இந்தி மார்க்கெட்டை பிடிக்கும் விதமாக அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் முக்கிய காட்சிகளில் விஜய் நடித்திருப்பதாக தகவல் வெளியானது. அட்லி விஜயின் நெருங்கிய நண்பர் என்பதால் விஜயை வைத்து காட்சிகளை இயக்க திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய்க்கு பதிலாக அந்த காட்சிகளை அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே புஷ்பா பட ஹிட் மூலம் அல்லு அர்ஜுனின் மார்க்கெட் வட இந்தியாவில் எகிறி உள்ளது.
இதனால் விஜய்க்கு பதில் அல்லு அர்ஜுனனை பயன்படுத்தினால் வட இந்தியாவில் மேலும் படம் பிரபலமாக ஓடும் என்றும் தெலுங்கிலும் படம் அதிக வசூல் பெற வாய்ப்பு இருப்பதாக இயக்குனர் அட்லி ஒரு முடிவை எடுத்துள்ளார். அதன்படி முக்கிய காட்சிகளில் நடிக்க அல்லு அர்ஜுனை அட்லி கேட்டதாகவும் அதற்கு அவர் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

- Advertisement -

இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனினும் ஹிந்தி படத்தில் நடிக்க விஜய் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவது அட்லீயின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விஜய் ஹிந்தி சினிமாவில் பாடல் காட்சிகள் மட்டும் நடித்தாலும் வசனங்களைப் பேசி சிறப்பு தோற்றத்தில் இதுவரை நடிக்க தயக்கம் காட்டி வருகிறார். விஜய் இது போன்ற வாய்ப்பு தவறு விடுவதால் முடியவில்லை மார்க்கெட்டை அவரால் பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular