Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாஎல்லா கோட்டையும் அழியுங்க, திரும்பவும் வரேன்.. அல்போன்ஸ் புத்திரன் கலகல பதிவு

எல்லா கோட்டையும் அழியுங்க, திரும்பவும் வரேன்.. அல்போன்ஸ் புத்திரன் கலகல பதிவு

- Advertisement -

2015 ஆம் ஆண்டு மலையாள சினிமாவை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சினிமாவுலயும் ஆட்சி செய்தது பிரேமம் திரைப்படம். இந்த திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்தாலும் இதற்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கினார்.

இயக்குனர் ஆல் போன்ஸ் புத்திரன் பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு கடந்த ஆண்டு நடிகர் பிரித்திவிராஜ் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நடிகை நயன்தாராவையும் வைத்து கோல்ட் என்ற திரைப்படத்தை இயக்கினார். இவர் எடுத்த பிரேமம் திரைப்படத்தின் ரசிகர்கள் பல இந்த கோல்ட் திரைப்படத்தையும் பெரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.  ஆனால் அவர்கள் காத்திருப்பு ஏமாற்றத்தை தான் தந்தது.

- Advertisement -

கோல்ட் திரைப்படம் முற்றிலும் தோல்வியடைந்தது. பல எதிர்பார்ப்புகள் இருந்ததால் என்னவோ படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் சற்றும் மனம் உடைந்தாலும் தற்பொழுது புத்துணர்ச்சி பெற்று மீண்டும் எழுந்து நிற்கின்றார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

- Advertisement -

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடிகர் சூரி எல்லா கோட்டையும் அழிங்க நான் ஃபர்ஸ்ட்ல இருந்து சாப்பிடுறேன் அப்படின்னு சொல்லுவாருல, அதேபோல தற்பொழுது இயக்குனர் அல்போன்ஸ் அந்த வசனத்தை  கூறியிருக்கிறார். இதுவரை நடந்ததெல்லாம் விட்டு விடுங்கள் இனி தன்னம்பிக்கையோடு என்னுடைய அடுத்த படத்தை எடுக்க இருக்கிறேன் என்று இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் இயக்குனர் அல்போன்ஸ்.

இவர் எடுக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  பிரேமம் போன்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த படம் கொண்டாடப்படும் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

ஆனால் இந்த திரைப்படத்தில் கதாநாயகன் கதாநாயகி யார் என்பதெல்லாம் இதுவரை வெளியிடப்படவில்லை . பிரேமம் போல் இருக்கும் என்று கூறியதால் இந்த திரைப்படத்தின் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து வருகிறார்கள். எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும் பிரேமம் திரைப்படம் போல் வராது என்று பலரிடம் கருத்துக்கள் உள்ளது. அதையெல்லாம் ஈடு செய்யும் வகையில் இந்த முறை தன்னம்பிக்கையோடு செயல்படும் இயக்குனர அல்போன்ஸ் புத்திரன் நிச்சயமாக வெற்றி அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular