Thursday, May 16, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய்க்கு அன்புமணி ராமதாஸ் சொன்ன அறிவுரை..ரசிகர்கள் பதிலடி

விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் சொன்ன அறிவுரை..ரசிகர்கள் பதிலடி

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய் . சினிமாவில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை திரட்டிய தளபதி விஜய் தற்பொழுது தன் திறமையை அரசியலில் காட்ட முடிவு செய்து இருக்கிறார்.

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் 10 மற்றும் 12 ம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளை பாராட்டும் விழாவை நடத்தினார். அந்த விழாவில் அவர் பேசிய பொழுது தான் அரசியலுக்கு வரப்போவதாக மறைமுகமாக ஒரு குறிப்பு வெளியிட்டிருந்தார். ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வரமாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட்டம் அதை கொண்டாடத் தொடங்கி விட்டது.

விஜய் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்கள் நிச்சயம் வெற்றியை சந்திப்பார்கள் என்று அரசியல் வல்லுனர்களும் கருதுகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை அறிவித்தார். அது அந்த அளவிற்கு மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

ஆனால் தளபதி விஜய் பெரியார்,அம்பேத்கர், காமராஜர் என்று பேசியதால் திராவிட தலித் அரசியல் பக்கம் விஜய் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சாதாரண மக்களுக்கு தளபதி விஜய் அரசியலுக்கு வருவது நல்லது என்று தோன்றும். ஆனால் ஏற்கனவே அரசியலில் உள்ள சின்ன சின்ன கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது.

- Advertisement -

பல வருடங்களாக கட்சி வைத்திருப்பவர்களுக்கு கிடைக்காத வெற்றி தளபதி விஜய் வந்தால் முதல் முறையிலேயே அபார வெற்றி அடைவார் என்பது அனைவருக்குமே தெரியும். இந்த நிலையில் இவர் அரசியலுக்கு வருவது பல கட்சிகளுக்கு பிடிக்காது அதனால் அவர் அவர் கருத்துக்களை வெளியிட தொடங்கி இருக்கிறார்கள்

குறிப்பாக லியோ திரைப்படத்தில் வெளிவந்த நான் ரெடி என்ற முதல் பாடலில் விஜய் சிகரெட் குடிப்பது போன்று காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அரசியலுக்கு வர நினைக்கும் நபர் எப்படி இது போல் படத்தில் நடிக்கலாம் என்று பலரும் பேசி வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள் படத்தை படமாக பாருங்கள் என்றும் வில்லன் கேரக்டர்களை புத்தர் போல் காட்ட முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்பொழுது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தளபதி விஜய் பேசிய திராவிட தலித் அரசியலை விமர்சிக்கும் வகையில் காமராஜர், அம்பேத்கர், பெரியார் என்று பேசினால் போதாது அவர்கள் கூறிய வழியில் நடந்து காட்ட வேண்டும் என்று விஜய்யை குத்தி காட்டி பேசி இருக்கிறார்.

Most Popular