Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாஆண்டிரியாவுடன் டேட்டிங் செய்த மிஷ்கின்?

ஆண்டிரியாவுடன் டேட்டிங் செய்த மிஷ்கின்?

- Advertisement -

பிரபல இயக்குனர் மிஸ்கினும் ஆன்ட்ரியாவும் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, பிசாசு  உள்ளிட்ட படங்களை எடுத்து பிரபலமடைந்தவர் இயக்குனர் மிஷ்கின்.

இயக்குனராக மட்டுமல்லாமல் தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலமும் ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் மிஷ்கின். ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ் இல் சிறப்பாக நடித்து அசத்திய இயக்குனர் மிஸ்கின் தற்போது விஜய் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

கடந்த ஒரு வாரமாக லியோ திரைப்படத்திற்காக காஷ்மீரில் படப்பிடிப்பில் இருந்த மிஸ்கின் தன்னுடைய சீன்களை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். இந்த நிலையில் மிஸ்கின் தற்போது மாவீரன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

- Advertisement -

சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் மிஸ்கின் அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பு தளத்திற்கு செல்ல உள்ளார். இந்த நிலையில் நடிகர் மிஸ்கினும் நடிகை ஆண்ட்ரியாவும் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளன..

இருவரும் படகில் ஒன்றாக அமர்ந்து செல்லும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியாவை வைத்து இயக்குனர் மிஸ்கின் படம் எடுத்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இன்னும் படம் ரிலீஸ் ஆகவில்லை. பிசாசு 2 படத்தில் ஏற்பட்ட பழக்கம் மூலம் தற்போது தனக்கு உள்ள நேரத்தில் நடிகை ஆண்ட்ரியா உடன் மிஷ்கின் டேட்டிங் செய்து உள்ளார்.

எனினும் இது குறித்து இருவரும் இந்த அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை. திரைப்படத்துறையில் ஒன்றாக இணைந்து பணியாற்றும் கலைஞர்கள் டேட்டிங் செய்வது தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல. எனினும் அழகு பதுமையான ஆண்ட்ரியா உடன் மிஷ்கின் செல்லும் இந்த புகைப்படம் இளைஞர்களை பொறாமை பட செய்துள்ளது.

Most Popular