சினிமா

3வது படத்திலேயே கவினுக்கு அடிச்ச செம லக்..! கடுப்பான தனுஷ்

விஜய் டிவியின் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக அறிமுகமானவர் நடிகர் கவின். அந்த தொடரிலேயே அவருக்கு ஒரு நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பிறகு அவர் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 பங்கு பெற்றார்.

Advertisement

அந்த சீசன் ரசிகர்களால் பெரும் அளவில் கொண்டாடப்பட்டு வந்தது. அதிலிருந்து நடிகர் கவின் பிரபலமானார். பிக்பாஸ் சீசனை விட்டு வெளியேறிய பிறகு அவருக்கு சில பட வாய்ப்புகளும் வந்தது. முதலில் லிஃப்ட் என்ற திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ஓடிட்டியில் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது இவர் இயக்குனர் பாபு இயக்கத்தில் டாடா என்று திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி திரையரங்கங்களில் வெளிவந்தது. இந்தத் திரைப்படம் நவீன காலத்தில் உள்ள காதல் கதையாகும். இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பு இருக்கிறது பதினொரு கோடி ரூபாய் வசூல் பெற்றுள்ளது.

Advertisement

இதைத் தொடர்ந்து உன்னாலே உன்னாலே, பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்த நடன இயக்குனரான சதீஷ் தற்பொழுது ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் கதாநாயகன் ஆக நடிகர் கவினை தேர்வு செய்திருக்கிறார்கள். இதுவும் ஒரு நகைச்சுவையான காதல் திரைப்படம் ஆகும்.

நடிகர் கவினுக்கு தற்பொழுது இருக்கும் இந்த வரவேற்பை பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து நல்ல படங்களில் நடித்தால் வரும் காலத்தில் ஒரு நல்ல இடத்தை சினிமாவில் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த நிலையில், இயக்குனர் சதீஷ் உடைய நெருங்கிய நண்பர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஆவார். இதன் காரணமாக இவர் இயக்குனர் சதீஸ் எடுக்க இருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். நடிகர் கவினுக்கு இது பெரிய வாய்ப்பாகும். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் தன்னுடைய மூன்றாவது படத்திலேயே இசையமைக்கப் போகிறார்.  இது நடிகர் கவினுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக வந்துவிட்டது. ஏனென்றால்  தனுஷின் ஐம்பதாவது படத்திற்கு இசையமைக்க முடியாத என மறுத்த அனிரூத்,  தற்போது கவின் படத்திற்கு ஓகே சொல்லி விட்டார்.

விஜய் டிவியிலிருந்து வந்து ஒரு சாதாரண நடிகனாக இருந்து தற்பொழுது தமிழ் சினிமாவிலேயே முதன்மை இடத்திலிருந்து இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் போல வரும் காலத்தில் நடிகர் கவினும் வளர்ச்சி அடைவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top