துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித் தற்பொழுது ஏகே 62 என்று சொல்லப்படும் தன்னுடைய 62 ஆவது படத்தை நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார். இவர் இதற்கு முன்பு தடம் ,தடையறத் தாக்க, கழகத் தலைவன் மீகாமன், முந்தினம் பார்த்தேனே போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.
மேலும் காக்க காக்க இமைக்கா நொடிகள் போன்ற டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி இருக்கிறார். முன்பு இவர் இயக்கிய அனைத்து படங்களுமே ஆக்சன் திரில்லர், கிரைம் திரில்லர் போன்ற திரைப்படங்களாக உள்ளது. இதனால் இப்பொழுது இவர் இயற்கை இருக்கும் இந்த எக்கே 62 திரைப்படமும் திரில்லர் திரைப்படமாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்ததும் பின்பு அவர் நீக்கப்பட்டதும் ஏற்கனவே வந்த தகவல் ஆகும். இதற்குப் பிறகுதான் இயக்குனர் மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்க தல அஜித் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதேபோன்று இந்த திரைப்படத்திற்கு முதலில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பதாக தகவல் வெளியாகி வந்தது.
இதற்கு முன்பு அஜித் நடித்த விவேகம் ,வேதாளம் போன்ற திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருந்தார். இதில் உள்ள பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் மீண்டும் தல படத்தில் அனிருத் திரவிச்சந்திரன் இசையமைக்கு இருக்கிறார் என்று மிகுந்த ஆர்வத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு பெரும் ஏமாற்றத்தை சந்திக்க உள்ளனர்.
ஏகே 62 திரைப்படத்தை விட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியது போன்று அதையே காரணம் காட்டி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் விலகி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளரான அருண்ராஜ் எனப்படும் ஒரு இளம் இசையமைப்பாளர் இசையமைக்க இருக்கிறார். ஆனால் இவர் இதுவரை தமிழ் சினிமாவில் இசையமைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.