சினிமா

சூர்யா 42 இல் இணைந்த அனிரூத்.. இயக்குனர் சிவாவுடன் மீண்டும் கூட்டணி

தமிழ் சினிமாவின் பிசியாக நடிகராக நடிகர் சூர்யா வலம் வருகிறார் இயக்குனர் பாலாவுடன் தனது 41வது திரைப்படமான வணங்கான் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனது 42வது திரைப்படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா உடன் முதல் முறையாக சூர்யா கை கோர்க்கிறார். அண்ணாத்த திரைப்பட தோல்விக்கு பிறகு இயக்குனர் சிவா தனது கதை களத்தில் மேலும் கவனம் செலுத்தி திரைக்கதையை செதுக்கியிருக்கிறார்.

குடும்பங்கள் கொண்டாடும் வகையில் இந்த படத்தை அமைத்துள்ள சிறுத்தை சிவா ஆக்சன் காட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதையை எழுதி இருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியை மேலும் பலப்படுத்தும் வகையில் தற்போது புதிய அப்டேட் உருவாகியுள்ளது இதில் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்தில் இசையமைப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. சிறுத்தை சிவா, அனிரூத் கூட்டணி, அஜித் இல்லாமல் தற்போது முதல் முறையாக இணைந்துள்ளனர்.

மேலும் இந்தப் படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தமிழில் தயாரிக்க உள்ளது ராஜேஷ் ஷாம் படத்தை இந்நிறுவனம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் 42வது திரைப்படம் தெலுங்கு மொழியிலும் நேரடியாக ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இல்லை பிப்ரவரி மாதத்திலும் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. இந்தப் படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியது எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாடக்குழு வெளியிடவில்லை ஒரு வேலை இருவரும் இணைந்தால் ரசிகர்களிடையே பட்டையை கிளப்பும்

தற்போது சூர்யா பாலா சிறுத்தை சிவா இயக்குனர் ரவிக்குமார் இயக்குனர் ஞானவேல் இயக்குனர் விக்ரம் குமார் ஆகியோர் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் மேலும் நடிகர் சூர்யா லிங்குசாமியிடம் படத்திற்கான ஆன்லைனையும் கேட்டு அதில் நடிக்க முடிவெடுத்துள்ளார் இதன் பிறகு நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் இதனால் சூர்யாவுக்கு வரிசையாக பல்வேறு படங்கள் காத்திருக்கின்றன.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top