Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமா2023ஆம் ஆண்டு அனிரூத் இசை அமைக்கும் படங்கள்.. பட்டியல் இதோ!

2023ஆம் ஆண்டு அனிரூத் இசை அமைக்கும் படங்கள்.. பட்டியல் இதோ!

- Advertisement -

சினிமா உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் புகழும் பெருமையும் மாறுபட்டு போகும். இந்த நிலை நடிகர் இயக்குனர்கள் ஆகியவர்களுக்கு மட்டும் பொருந்தாது. இது இசையமைப்பாளர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றுதான்.

அன்றிலிருந்து இன்று வரை இசையமைப்பாளர்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு தான் வருகிறார்கள். உதாரணத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா ,இசை புயல் ஏ ஆர் ரகுமான் இன்று இன்னும் பல இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த வரிசையில் தற்பொழுதைய தமிழ் சினிமாவின் இசை ராஜாங்கத்தை ஆட்சி செய்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். தமிழ் சினிமா உடைய முன்னணி நட்சத்திரங்கள் கதாநாயகர்களாக நடிக்கும் படங்களுக்கு தன்னுடைய இசையை கொண்டு அழகு கூட்டி வருகிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்.

- Advertisement -

இவர் படைக்கும் பாடல்கள் எல்லா வயதினர்களும் ரசிக்கக் கூடிய அளவிற்கு இருக்கும். அவருடைய திறமைக்கு மேலும் மேலும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டே போகிறது அந்த வகையில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் அனிருத் வருசலாக ஆறு படங்களில் இசையமைக்க இருக்கிறார். அது என்னென்ன திரைப்படங்கள் என்றும் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

ஏகே 62 என்று சொல்லப்படும் தல அஜித் நடிக்கும் திரைப்படம் தொடங்கி நாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெய்லர் என்றும் தன் இசை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம் தெலுங்கு ஹிந்தி தமிழ் என்று இத்தனை மொழிகளிலும் நடிகர் சாருக் கான் நடிக்கும் ஜாவான் திரைப்படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் தான் இசையமைக்கே இருக்கிறார். மேலும் தெலுங்கு சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் ஜூனியர் என்டிஆர் உடைய என் டி ஆர் 30 என்ற திரைப்படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார். இன்னும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் உடைய ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக தமிழ் சினிமாவின் உடைய தளபதி விஜய்யும் தளபதி 67 திரைப்படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனின் இசையமைக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

Most Popular