புரட்சி தளபதி விஷால் மூன்று கெட்டப்புகளில் முதல் முறையாக நடிக்கும் படம் மார்க் ஆன்டனி. இதில் விஷால் அப்பா கதாபாத்திரம் மற்றும் இரண்டு மகன்களின் கதாபாத்திரம் என மொத்தம் மூன்று வேடங்களில் சிறப்பிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரித்து வர்மா மற்றும் எதிராக எஸ்.ஜே.சூர்யா, சுனில் நடிக்கின்றனர்.
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இத்திரைப்படத்தை தலைமை தாங்குகிறார். மார்க் ஆண்டனி படத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது, ஆனால் அவர்களால் அதை செய்யமுடியவில்லை.
படத்தைக் கதை 1975 & 1995 காலக் கட்டத்துக்கு இடையே நடக்கும் நிகழ்வு. கதையில் வி.எப்.எக்ஸ் அதிகம் இருக்க வேண்டாம் என விரும்பிய படக்குழு பிரம்மாண்ட செட்கள் அமைத்து ஷூட்டிங் மேற்கொண்டது. எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த போது போன வாரம் ஒரு பெரிய விபத்து.
சண்டைக் காட்சியைப் படமாக்கும் போது நடிகர் விஷால் கீழே விழுந்து கிடப்பது போல ஸ்கிரிப்ட் அமைந்திருந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நேராக விரைந்து அமைக்கப்பட்டிருந்த செட்டின் சுவரில் முட்டியது. நூலிழையில் விஷால் உயிர் தப்பினார்.
விபத்துக்கு பின்னர் எல்லாம் சரி செய்யபட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடர்ந்தது. படக்குழுவின் நேரம் மோசமாக இருக்கிறது போல, மீண்டும் இன்று மற்றொரு விபத்து ஏற்பட்டுள்ளது. இம்முறையும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஈ.வி.பி பிலிக் சிட்டியில் நடந்து கொண்டிருக்கும் ஷூட்டிங்கில் லைட் கம்பம் சரிந்து லைட்மேனின் தலையில் விழுந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.