Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாஇவர்கள் செய்த வேலையால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.. மனம் திறந்து பேசிய நடிகை...

இவர்கள் செய்த வேலையால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.. மனம் திறந்து பேசிய நடிகை அனுயா..!

சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத். இதைத்தொடர்ந்து இவர் மதுரை சம்பவம், நகரம் ,நஞ்சுபுரம், நண்பன், நான் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது போன்ற ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தார் ஆனாலும், இவருக்கென்று நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவருடைய ஆபாச வீடியோக்களை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல பாடகி சுசித்ரா வெளியிட்டது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. பாடகி சுசித்ரா அனுயா மட்டுமில்லாமல் பல பிரபலங்களினுடைய ஆபாச வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்றும் மறக்க முடியாத ஒன்றுதான்.

இதில் பாதிக்கப்பட்ட அணுயா இதைப் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். மார்ஃபிங் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட பொழுது அதால் பாதிக்கப்பட்ட எனக்கு அதனுடைய கஷ்டம் தெரியும் என்று தொடங்கி.

- Advertisement -

ஒரு பெண்ணை சாதாரணமாக புகைப்படம் எடுக்கிறார்கள். பின்பு மார்பிங் செய்து அதை ஆபாசப்படுத்தி விடுகிறார்கள் .அது பொய்யென்று நிரூபிப்பதற்கு கூட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை கூட ஏற்படுகிறது என்று கூறினார்.

- Advertisement -

மேலும்  எனக்கும் கூட அப்படி ஒரு நிலை ஏற்பட்டது ஆனால் என்னுடைய ஒட்டு மொத்த குடும்பமும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு நான் எப்படிப்பட்டவள் என்பது முழுமையாக தெரியும். என்னை அவர்கள் நம்பினார்கள். அதனால் என்னால் அதிலிருந்து வெளிவர முடிந்தது.

எல்லா பெண்களுக்கும் இது போன்ற நம்பிக்கையான குடும்பம் கிடைப்பதில்லை. கணவர் வீட்டுக்கு சென்றாள் உன் அம்மா வீடு தான் உன் வீடு என்கிறான். தாய் வீட்டில் கணவர் வீடு தான் உன் வீடு என்கிறார்கள். இதில் பெண்களுக்கு எது வீடு? என்ற பெரும் கேள்வியையும் முன் வைத்திருக்கிறார் நடிகை அனுயா பகவத்.

நடிகை அனுயா பகவத்தின் இந்த பதிவு சிந்திக்கப்பட வேண்டிய ஒரு செய்தி தான். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சமுதாயம் துணை நின்றால் நிச்சயம் அவள் அதிலிருந்து மீண்டு வர முடியும் ஆனால் இங்கு அவளை அளிப்பது அந்த சமுதாயம் தான். இதுதான் பல பெண்களின் வாழ்வில் நிகழ்கிறது.

Most Popular