Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாஏப்ரல் 14 ரிலீஸ்- காற்று வாங்கும் திரையரங்குகள்! தோல்வி அடையும் புது படங்கள்

ஏப்ரல் 14 ரிலீஸ்- காற்று வாங்கும் திரையரங்குகள்! தோல்வி அடையும் புது படங்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் பண்டிகை காலங்களில் பெரிய நட்சத்திரங்களின் படம் திரையரங்குகளில் வரும். இதனை பார்க்க பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு செல்வார்கள். இதன் மூலம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும். பொங்கல்,தீபாவளி, தமிழ் புத்தாண்டு ஆகிய பண்டிகை எப்பொழுதுமே கல்லா கட்டும் மாதமாக திரையரங்க உரிமையாளர்களுக்கு இருக்கும்.

ஆனால் இப்போது திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்தன. இரண்டு படங்களும் இணைந்து தமிழகத்தில் 240 கோடி ரூபாய் அளவுக்கு வசூலை குவித்தது.

- Advertisement -

ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசான திரைப்படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. லாரன்ஸ் நடித்த புத்திரன் திரைப்படம் மட்டும் தான் மக்களின் கவனத்தை பெற்றது. ஆனால் அதுவும் மோசமான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதனால் ஏப்ரல் 14ஆம் தேதி ருத்ரன் திரைப்படம் வெறும் இரண்டரை கோடி ரூபாய் தான் தமிழகத்தில் வசூலை பெற்றிருக்கிறது.

- Advertisement -

மற்ற படங்கள் எதுவும் பொதுமக்களால் கண்டுக்க கூட படவில்லை. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் வெளியான பத்து தல மற்றும் விடுதலை திரைப்படம் தான் பெரும்பான்மையான திரையரங்குகளில் போடப்பட்டு வருகிறது. ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாரிசு , துணிவு திரைப்படம் வசூலில் சாதனை படைத்தன.

ஆனால் அதன் பிறகு எந்த ஒரு படமும் பெரிய அளவில் வசூலை திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொடுக்கவில்லை. விடுதலை திரைப்படம் ஓரளவுக்கு மக்களை திருப்திப்படுத்தி இருக்கிறது.  ஆனால் பெரிய வசூல் சாதனை படைக்கும் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த போக்கை பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மாற்றும் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Most Popular