சினிமா

ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் பட்டியல் இதோ!

கடந்த 2020ல் இருந்து 2021ஆம் ஆண்டு வரை கொரோனா காலத்தில் எல்லா துறையும் முடங்கப்பட்டது போல் சினிமா துறையும் முடங்கி கிடந்தது.இதனால் பல திரைப்படங்கள் படப்பிடிப்பில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இன்னும் சில திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு திரையரங்கங்கள் வெளியிடப்பட முடியாமல் வேறு வழியின்றி அமேசான் ஹாட் ஸ்டார் நெட்பிளிக்ஸ் போன்ற ஓ டி டி களின் வெளியிடப்பட்டது.

Advertisement

ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறி மீண்டும் உலகமே சகஜ நிலைக்கு மீண்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் தல தளபதி போன்ற முன்னணி நட்சத்திரங்களின் உடைய திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இதுவரை முடங்கி இருந்த எல்லா திரைப்படங்களுமே ஏறத்தாழ  திரையரங்குகளில் ஒன்றின் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது வருகின்ற ஏப்ரல் 14ஆம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்குகளில் நிறைய திரைப்படங்கள் வெளியிடப்பட இருக்கிறது. அதனுடைய பட்டியல் தற்பொழுது வெளிவந்திருக்கிறது அது என்னவென்று பார்ப்போம்.

Advertisement

இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் ருத்ரன் என்ற திரைப்படமும், இயக்குனர் ஹாரிஸ் பிரபு இயக்கத்தில் நடிகர் அருள்நிதி மற்றும் பாரதிராஜா நடித்த திருவின் குரல் என்று திரைப்படமும், இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த சொப்பன சுந்தரி என்ற திரைப்படமும் இயக்குனர், அருண் கார்த்திக் இயக்கத்தில் நடிகர் மகேந்திரன் மற்றும் நடிகை காவியா அறிவுமணி ஆகியோர் நடித்திருக்கும் ரிபப்ரி என்ற திரைப்படமும்,

இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் தமிழரசன் என்ற திரைப்படமும், இயக்குனர் குணசேகரன் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளின் நடிகை சமந்தாவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து எடுத்திருக்கும் சகுந்தலா என்ற திரைப்படமும், திருக்குறள் ரிஜிஸ் மிதிலா இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் யானை முகத்தான் என்று திரைப்படமும்  தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது.

சாதாரணமாக ஏதாவது ஒரு பண்டிகை நாள் என்றால் மக்கள் சென்று மகிழ்வதற்கு திரையரங்குகளையும் தேர்வு செய்வார்கள். அந்த வகையில் தற்பொழுது வெளியிடப்பட இருக்கும் என்று திரைப்படங்கள் எல்லாம் குடும்பங்களால் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் உள்ளதால் அப்போது திரையரங்குகள் கிடைக்காது என்ற காரணத்திற்காக அனைத்து படங்களும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top