2001 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட்ட திரைப்படம் தல அஜித் நடித்த தீனா. இந்த திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ஏ ஆர் முருகதாஸ்.
ரட்சகன், குஷி போன்ற திரைப்படங்களுக்கு துணை இயக்குநராக பணியாற்றினார். தல அஜித்தின் நடிப்பில் வெளியான தீனா திரைப்படத்தை இயக்கிய பிறகு தான் அவருக்கு இன்றே ஒரு அடையாளம் கிடைத்தது. இந்த திரைப்படம் தல அஜித் உடைய பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.
தொடர்ந்து இவர் இயக்கிய கஜினி,கத்தி,ஏழாம் அறிவு, சர்கார், ஸ்பைடர் போன்ற எல்லா திரைப்படங்களுமே ரசிகர்களால் பெரும் அளவில் கொண்டாடப்பட்டு வந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் ஒருவராக வளம் வந்த ஏ ஆர் முருகதாஸ். சில நாட்களாக திரைப்படங்களின் மீது ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.
இவர் இயக்கிய திரைப்படங்களையெல்லாம் எவ்வளவு வெற்றியை காண முடிகிறதோ, அந்த அளவிற்கு சர்ச்சையும் ஏற்பட்டு வந்தது. இதை நான் எழுதிய கதை, நீ எழுதிய கதை என்று அவர் எழுதிய கதை எல்லாம் திருட்டு கதை என்று கூறப்பட்டது.
இதன் காரணத்தினால் இவருடைய திரைப்படங்களை நடிப்பதற்கு கதாநாயகர்கள் தயங்குகிறார்கள். அந்த வகையில் இவருடைய திரைப்படத்தில் மீண்டும் தல அஜித் எப்பொழுது இணைவார் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
அஜித் தற்பொழுது இயக்குனர் மகிழ் திருமேணியின் இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தை நடிக்க இருக்கிறார். இது திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு முடிந்த பிறகு பைக்கில் உலகம் முழுவதையும் சுற்றி பார்க்கும் தனது லட்சியத்தை நிறைவேற்ற இருக்கிறார். அதற்கு பிறகு தன்னுடைய அடுத்த திரைப்படத்தை நடிக்க போவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த திரைப்படத்தை தல அஜித் ஏ ஆர் முருகதாஸ் உடன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் முருகதாஸ் தல அஜித்திற்காக ஒரு ஆக்ஷன் திரைப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறாராம்.
தற்பொழுது ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் உடைய எஸ் கே 23 என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார். தல அஜித்தின் உடைய லட்சியம் நிறைவேறிய பிறகும் ஏ ஆர் முருகதாஸ் உடைய எஸ் கே 23 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகும் தல அஜித்தின் திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் மற்றும் தல அஜித்தின் உடைய இணைப்பை அறிந்த ரசிகர்கள் பெருமளவில் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.