சினிமா

தர்காவில் ஏ.ஆர். ரஹ்மானுடன் ரஜினிகாந்த் வழிபாடு.. என்ன காரணம்?

தான் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தன்னை உயர்த்தியது இறைவன் தான் என்ற நன்றி மறவாத மனிதர்கள் ஒருவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தார்.அங்கு தன் மகளோடு நல்ல முறையில் தரிசனமும் பெற்றார். அவருக்கு அங்கு இருந்தவர்கள் சமூகத்தில் ஒரு சிறந்த அந்தஸ்துடைய மனிதர் என்ற மரியாதைக்கும் தந்தார்கள்.

சகல மரியாதைகள் தனக்கு கிடைத்தாலும் தான் நிற்பது கடவுளுக்கு முன் என்ற பயபக்தியோடு நின்று கடவுளை வணங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆந்திராவில் கடப்பா என்று சொல்லப்படும் இடத்தில் இருக்கக்கூடிய தர்காவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்றிருந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்காவிற்கு சென்றிருக்கும் பொழுது, அதே தர்காவிற்கு இசை புயல் ஏ ஆர் ரஹ்மானும் அதே நேரத்தில் அங்கு வந்திருந்தார். ஒன்றின் பின் ஒன்றாக இருவரும் தர்காவிற்கு வந்ததும் அவர்கள் இருவருக்கும் வழக்கமாக அந்த தர்காவில் செய்யப்படும் மரியாதைகளும் செய்யப்பட்டது. காவி நிறத்திலான தலைப்பாகையும் துண்டும் அணியப்பட்டது.பின்பு இருவரும் ஆக தர்காவில் செய்யப்படும் சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் செய்தார்கள்.

கடப்பாவில் இருக்கும் தர்காவிற்கு ஏற்கனவே நடிகர் சூர்யா சென்றிருந்த வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாகி வந்ததென்பது குறிப்பிடத்தக்கது. மதங்களைக் கொண்டு பிரிவினைகளை உண்டு பண்ணும் சமூகத்தின் நடுவில் இவர்கள் இப்படி எல்லா மதமும் சம்மதம் என்று தர்காக்களுக்கு சென்று வருவதும் பிற மதங்களை மதிப்பதும் இவர்களின் மீது ஒரு பெரும் மரியாதையும் ஏற்படுத்தி வருகிறது. இவர்களை நல்ல நடிகர்களாக மட்டுமல்லாமல் நல்ல மனிதர்களாகவும் மக்கள் முன்னிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

இப்பொழுது எல்லா தரிசனங்களும் முடிந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மகளாஷ் சூர்யாவுடன் வீட்டிற்கு திரும்பிய பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினி காந்த் அவர்கள் இவர்கள் இருவருக்கும் திருஷ்டி எடுத்து வரவேற்பு வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top