Thursday, March 28, 2024
- Advertisement -
Homeசினிமாஆர் ஆர் ஆர் இசை அமைப்பாளரின் வாழ்க்கை நமக்கு எல்லாம் பாடம் - ஏ ஆர்...

ஆர் ஆர் ஆர் இசை அமைப்பாளரின் வாழ்க்கை நமக்கு எல்லாம் பாடம் – ஏ ஆர் ரஹ்மான்

- Advertisement -

ட்ரிபிள் ஆர் படத்தில் நாட்டு குத்து பாடல் மூலம் கோல்டன் குலோப் விருது வாங்கியவர் இசையமைப்பாளர் கீராவணி. தற்போது தன்னுடைய 61வது வயதில் கீராவணி நாட்டுக்குத்து பாடலுக்காக ஆஸ்கார் விருதுக்கு போட்டி போடுகிறார். கீராவணி கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வருகிறார். தெலுங்கு, தமிழ் என பல படங்களில் அவர் இசை அமைத்தாலும் பாகுபலிக்கு பிறகு தான் அவருடைய திரைப்பட வாழ்க்கையே மாறியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏ ஆர் ரகுமான் கீராவாணி வாழ்க்கை நமக்கு எல்லாம் ஒரு பாடம். கீராவாணி சிறந்த இசையமைப்பாளராக இருந்தாலும் அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பதற்கு கீராவானி ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறார். உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் கூறுகிறேன். கிராவணி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இசைத் துறையை விட்டு ஓய்வு பெறலாம் என திட்டமிட்டு இருந்ததாக நான் கேள்விப்பட்டேன்.

- Advertisement -

ஆனால் அதன் பிறகு தான் பாகுபலி, ட்ரிபிள் ஆர் என அவருடைய இசை வாழ்க்கையே உச்சத்துக்கு சென்றது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது நமக்கு ஒரு விஷயம் சரிப்பட்டு வரவில்லை. அதிலிருந்து விலகிக் கொள்ளலாம் என நாம் நினைத்து விடக்கூடாது. தொடர்ந்து உழைத்தால் நிச்சயமாக நமக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவிடும். கீரவாணி இசை விட்டு சென்றுவிடலாம் என நினைத்தபோதுதான் தற்போது கோல்டன் குரூப் விருது ஆஸ்கார் விருது என அவருடைய பெயர் சென்று இருக்கிறது .

- Advertisement -

இதனை நாம் அனைவரும் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ட்ரிபிள் ஆர் படம் ஆஸ்கார் விருது வாங்க வேண்டும் என என்னுடைய வாழ்த்துக்கள். அதற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்தியாவிலிருந்து எந்த படம் சென்றாலும் அது ஆஸ்கார் விருது வாங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். கிராவணி மரகதமணி என்ற பெயரில் தமிழில் அழகன், நீ பாதி நான் பாதி போன்ற படங்களில் 1991 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular