Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாஅவர் குணமே அப்படித்தான்.. இளையராஜா குறித்து ஓப்பனாக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்.. !

அவர் குணமே அப்படித்தான்.. இளையராஜா குறித்து ஓப்பனாக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்.. !

1976ஆம் ஆண்டு அன்னக்கிலி படத்தின் மூலம் அறிமுகமாகி உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவராக திகழ்பவர் இளையராஜா. காலங்கள் தாண்டி இன்றைய இளைய சமுதாயத்தின் விருப்பமான கலைஞனாக கூட இருக்கிறார்.

- Advertisement -

கிட்டத்தட்ட 1000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துவிட்ட இளையராஜா இன்றைய இசையமைப்பாளரின் முன்மாதிரியாக விளங்குகிறார். “ புது ராகம் படைப்பதினாலே நானும் இறைவனே ” எனும் இவரது பாடல் இவருக்கு மிகக் கச்சிதமாக பொருந்தும்.

இளையராஜாவின் குழுவில் ஓர் உறுப்பினராக சேர்ந்து இன்று அவரது புகழுக்கு ஈடாக நிற்கும் மற்றொரு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்திய சினிமா தாண்டி சர்வதேச படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 2 ஆஸ்கார் விருதுகள் வென்று நாட்டுக்கே மிகப் பெரிய பெருமையைச் சேர்த்துள்ளார்.

- Advertisement -

தன் குரு இளையராஜா குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது, “ அந்தக் காலத்தில் இத்துறையில் இருப்பவர்கள் சரக்கு, சிகிரெட் மற்றும் இதர கெட்டப் பழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். இதனையெல்லாம் இளையராஜா தான் உடைத்தார். அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. ” என்றார்.

- Advertisement -

மேலும், “ அவரைப் பார்த்தாலே நடுங்குவார்கள். அவரது குணம் அப்படி. ” எனக் குறிப்பிட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதை 2 வழியில் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று கெட்டப் பழக்கங்களுக்கு ஸ்டிரிட்டாக இருப்பார். மற்றொன்று அவரின் இயல்பே சிடு சிடுவென இருப்பது.

இளையராஜாவின் கோப குணத்தைப் பற்றி பல கலைஞர்கள் பேசியுள்ளனர். மாமனிதன் இயக்குனர் இளையராஜா தன் மேல் எரிந்து விழுந்து ரெக்கார்டிங்க்கு சேர்க்காமல் போனதை மேடையில் குறிப்பிட்டு அழுததெல்லாம் மறக்க முடியாத காட்சி. இதை விட சிறந்த உதாரணம் இளையராஜாவே தான். பல மேடைகளில் அவரின் தலைக்கணத்தை நாம் தெளிவாகக் காணலாம்.

Most Popular