Thursday, December 5, 2024
- Advertisement -
Homeசினிமாஏஆர் ரஹ்மான் முடியை வெட்ட காரணம் என்ன? தந்தை குறித்து உருக்கமான பேச்சு

ஏஆர் ரஹ்மான் முடியை வெட்ட காரணம் என்ன? தந்தை குறித்து உருக்கமான பேச்சு

தமிழ் சினிமாவின் இசை புயல் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் ஏ ஆர் ரகுமான். யாருமே எண்ணி பார்க்காத அளவில் இரண்டு ஆஸ்கார் விருது, கோல்டன் குளோபல் விருது என பல்வேறு உயிரிய விருதுகளை வென்று தற்போது இன்னும் இளம் இசையமைப்பாளர்களுக்கு கடும் போட்டியாக இருந்து வருகிறார்.

- Advertisement -

ரோஜாவில் தொடங்கி மாமன்னன் வரை உங்களுடைய இசையை இன்னும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் இசைக்கச்சேரி நடத்துவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் நெறியாளர் உங்களின் நீண்ட முடியை ஏன் விட்டீர்கள் என கேட்டார். அதற்கு நகைச்சுவையாக பதில் அளித்த ஏ ஆர் ரகுமான் என்னுடைய மனைவி தான் இந்த முடியை வெட்ட சொன்னார்.

- Advertisement -

முடியை வெட்டாமல் என் அருகில் வந்து படுக்காதீர்கள் என கூறிவிட்டார். எனக்கும் உங்களுக்கும் வித்தியாசமும் தெரியவில்லை. வெட்டி விடுங்கள் என தெரிவித்தார். இதனால் தான் தான் முடியை வெட்டி விட்டேன் என்று கூறினார்.

- Advertisement -

குழந்தைகளுக்கு யாரும் அறிவுரை கூற வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ள ஏ ஆர் ரகுமான் நமது வாழ்க்கையை சிறப்பாக, நல்லவனாக வாழ்வதன் மூலம் குழந்தைகள் நம்மிடமிருந்து கற்றுக் கொள்வார்கள் என ஏ ஆர் ரகுமான் கூறினார் .

தான்  அமைதியாக ஒழுக்கத்துடன் இருப்பதற்கு காரணம் எனது தந்தை தான் என்று ஏ ஆர் ரகுமான் உருக்கமாக தெரிவித்தார். ரகுமான் தந்தையிடம் யாரேனும் உதவி என்று கேட்டால் கையில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடுவாராம்.

மேலும் பழகிய அனைவரிடமும் நல்ல மனிதன் என்ற பெயர் வாங்கினாராம். இதனால் அவரைப் பார்த்து பல நல்ல விஷயங்களை தான் கற்றுக் கொண்டதாக ரஹ்மான் கூறினார். மேலும் கடந்த 40 ஆண்டுகளாக வெள்ளிக்கிழமை ஏழைகளுக்கு பிரியாணி சாப்பாடு போட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Most Popular