Friday, April 4, 2025
- Advertisement -
Homeசினிமாராம் சரணுடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான்.. ! 7 ஆண்டுகளுக்குப் பின் தெலுங்கில் இசைப் புயல்.. !

ராம் சரணுடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான்.. ! 7 ஆண்டுகளுக்குப் பின் தெலுங்கில் இசைப் புயல்.. !

தெலுங்கு சினிமாவில் நடிகர் ராம் சரண் 2007ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தார். மகதீரா, ஆரஞ், எவடு, துருவா, ரங்கஸ்தளம் மற்றும் இந்தியாவின் பெருமையான ஆர்.ஆர்.ஆர் போன்ற சிறந்த படங்கள் இவரது பெயருக்குப் பின் இருக்கிறது. தற்போது ராம் சரண் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

‘ கேம் சேஞ்சர் ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் அரசியல் களத்தை மையமாக கொண்டதாகும். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் கதையை ஷங்கர் படமாக எடுக்கிறார். இதில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், சுனில் வர்மா, ஶ்ரீகாந்த் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் தவிர சல்மான் கான், பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘ கிசி கா பாய் கிசி கி ஜான் ’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷங்கருடன் இணைந்து பணிபுரிந்த பின் இயக்குனர் புச்சி பாபு சனாவுடன் இணைகிறார் ராம் சரண். இதுவே ஆர்.சி 16.

- Advertisement -

வைஷ்ணவ் தேஜா, கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘ உப்பென்னா ’ படத்தை இயக்கியவர் பாபு சனா. இவரும் ராம் சரணும் கைகோர்க்கும் படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் தெலுங்கு படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

- Advertisement -

ராம் சரணின் இந்தப் படம் ஸ்போர்ட்ஸ் படமாக உருவாகிறது. செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் பாடல் ஆஸ்கர் விருது வென்ற பின் பல நேர்காணலில் படக்குழு பங்கேற்றது. அதில் ஒன்றில், ஸ்போர்ட்ஸ் சம்மதப்பட்ட படத்தில் நடிப்பது அவரது நீண்ட கால ஆசை எனத் தெரிவித்திருந்தார் ராம் சரண்.

Most Popular