சினிமா

5 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீசாகும் சதுரங்க வேட்டை 2 ! வெளியாகும் தேதி அறிவிப்பு

H Vinoth Sathuranga Vettai

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக வலம் வருபவர் ஹச். வினோத். தனது முதல் திரைப்படமான சதுரங்க வேட்டையை 2014 ஆம் ஆண்டு ஹச். வினோத் இயக்கினார். ஒளிப்பதிவாளர் நடராஜன் நடித்து வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. தமிழகத்தில் நடக்கும் மோசடிகளை ஏமாற்று வேலைகளை மையமாக வைத்து எச். வினோத் இந்த படத்தை இயக்கி பிரபலமானார்.

இதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களைச் வினோத் இயக்கினார். இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து சதுரங்க வேட்டை 2 என்ற படத்தை 2016 ஆம் ஆண்டு நடிகர் மனோபாலா தனது சொந்த தயாரிப்பில் தொடக்கினார். ஆனால் இந்த படத்திற்கு எச் வினோத் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை மேற்கொண்டார்.

Advertisement

இயக்குனர் நிர்மல் குமார் இந்த படத்தை இயக்கினார். இதில் நடிகர் அரவிந்த்சாமி, திரிஷா , பிரகாஷ்ராஜ், ஸ்ரீமன், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர். 2017 ஆம் ஆண்டு இந்த படம் திரைக்கு வர இருந்தது. ரசிகர்களிடையே இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. ஆனால் படம் ரிலீசுக்கு முன்பு தெலுங்கில் ரவி தேஜா நடித்த கில்லாடி படத்தின் கதைகளையும் , காட்சிகளையும் சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தில் திருடி விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் பிறகு படத்தின் தயாரிப்பாளரான மனோபாலா பொருளாதார நெருக்கடியில் சிக்கினார்.

இதனால் படத்தை வெளியிட முடியாமல் அவர் தவித்த நிலையில் படத்தில் நடித்த அரவிந்த் சுவாமியே சென்னை உயர்நீதிமன்றத்தில் தமக்கு 1. 75 கோடி ரூபாய் சம்பளம் பாக்கியை தயாரிப்பாளர் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படத்தின் கதி என்ன ஆனது என அனைவருமே மறக்கும் அளவுக்கு படம் ரிலீஸ் ஆகும் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.படத்தை
ஓடிடி- யிலாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் மனோபாலா முயற்சி எடுத்த நிலையில் அதுவும் தோல்வியில் முடிவடைந்தது. இப்படியே ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு வரும் அக்டோபர் 7ஆம் தேதி திரையரங்குகளில் சதுரங்க வேட்டை 2 படத்தை வெளியிட தயாரிப்பாளர் மனோபாலா முடிவெடுத்துள்ளார்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top