Monday, November 4, 2024
- Advertisement -
Homeசினிமாவெங்கட் பிரபு பிறந்தநாளுக்கு குட்டி அப்டேட் வழங்கியுள்ள தளபதி - 68 படக்குழு.. !

வெங்கட் பிரபு பிறந்தநாளுக்கு குட்டி அப்டேட் வழங்கியுள்ள தளபதி – 68 படக்குழு.. !

இயக்குனர் வெங்கட் பிரபுவும் அவரது குழுவும் இணைந்து பல தரமான காமெடி & ஆக்க்ஷன் படங்களைத் தந்துள்ளனர். கங்கை அமரனின் மகன்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன். பிரேம்ஜி நடிப்பு மற்றும் இசைப் பக்கம் சென்றார். வெங்கட் பிரபுவோ தனி ஒரு இளைஞனாக 2007ஆம் ஆண்டு சென்னை – 28 படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து சிறப்பான படங்களைத் தந்தார்.

- Advertisement -

சென்னை – 600028 இரு பாகங்கள், சரோஜா, கோவா, மாஸ், மங்காத்தா, மாநாடு, கஸ்டடி மற்றும் சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மங்காத்தா மற்றும் மாநாடு திரைப்படங்கள் அஜித் மற்றும் சிம்புவின் கம்பேக் படங்களாக மக்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்டது. இதன் வெற்றிகளுக்கு முக்கியக் காரணம் இயக்குனர் வெங்கட் பிரபு.

தளபதி 68 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வழக்கம் போல வெங்கட் பிரபுவின் படமென்பதால் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த மாதம் 3ஆம் தேதியை படத்தின் ஷூட்டிங் துவங்கிவிட்டது. பூஜை வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. லியோ வெற்றிவிழா நிறைவடைந்த பின்னர் தளபதி விஜய் ஷூட்டிங் பணிகளுக்காக தாய்லாந்து பறந்துள்ளார்.

- Advertisement -

இன்று வெங்கட் பிரபுவின் பிறந்தநாளை பெரிய அப்டேட் வழங்கி படக்குழு கொண்டாடவில்லை. காரணம் அண்மையில் தான் ஷூட்டிங் துவங்கியது, ஒரு 40% படத்தை நிறைவு செய்து விட்டு பெரிய அறிவிப்புகளை வழங்குவதே வழக்கம். இருப்பினும், அவரது பிறந்தநாளில் சிம்பினான ஓர் குட்டி அப்டேட்டை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொடுத்துள்ளார்.

- Advertisement -

சமூக வலைத்தளத்தில் அர்ச்சனா, “ ஜீனியஸ் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நேற்று தாய்லாந்தில் ஆக்க்ஷன் கட்சி ஷூட் செய்யப்பட்டது. இரவு நேரக் காட்சி என்பதால் இன்று அவரது பிறந்தநாளுக்கு விடுமுறை ” என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு படங்கள் என்றாலே கமெடியுடன் கலந்த ஓர் ஆக்க்ஷன் இருக்கும். அவரது நண்பர் குழுவுடன் சேர்ந்து செய்யும் காமெடி காட்சிகளும் படம் முடிந்த பிறகு வரும் பிளூப்பர்ஸ் காட்சிகளுக்குமே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது தளபதி விஜய்யை வைத்து இயக்குகிறார். இந்தப் படமும் வெங்கட் பிரபுவின் இயல்பான ஜாலியான படங்களில் ஒன்றாக இருக்க வேண்டி ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Most Popular