Tuesday, April 23, 2024
- Advertisement -
Homeசினிமாதல 62 மெர்சலான அப்டேட்ஸ்.. அஜித்துடன் இணையும் மாஸ்டர் வில்லன்

தல 62 மெர்சலான அப்டேட்ஸ்.. அஜித்துடன் இணையும் மாஸ்டர் வில்லன்

- Advertisement -

துணிவு திரைப்படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கான அப்டேட்ஸ்கள் தற்போது இருந்தே வரத் தொடங்கிவிட்டது. அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த படம் பொங்கல் முடிந்து படப்பிடிப்பு தொடங்க உள்ளது. வரும் தீபாவளி மையமாக வைத்து இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இருந்து அப்டேட்ஸ்கள் வரத் தொடங்கிவிட்டன.

ஏற்கனவே 29 ஆண்டுகளுக்குப் பிறகு அரவிந்த்சாமி அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலை மேலும் ஒரு அசத்தலான நடிகர் ஏகே 62 படத்தில் இணைந்திருக்கிறார். கைதி மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அசத்திய அர்ஜூன் தாஸ் தற்போது தல 62 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மாஸ்டர் படத்திலிருந்து அர்ஜுன் தாஸ் மிக முக்கியமான கேரக்டரை செய்திருந்தார்.

- Advertisement -

இதனால் தல 62 படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது .அஜித், அரவிந்த்சாமி, அர்ஜுன் தாஸ் என முதலெழுத்து அனைவருக்கும் “A”வாகவே இருப்பதால் படத்தின் ஆக்ஷன் ட்ரிபிள் மடங்கு இருக்கும் என எதிர்பார்க்கலாம். தல 62 படத்தின் கதையை இன்னும் யூகிக்க முடியவில்லை. இது குறித்து பேசிய இயக்குனர் விக்னேஷ் படம், அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதை மட்டும் தன்னால் சொல்ல முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏகே 62 திரைப்படத்தை லைக்கா தயாரிக்க உள்ளது .

- Advertisement -

பொங்கல் முன்னிட்டு துணிவு வாரிசு எப்படி மோதுகிறதோ அதே போல் தீபாவளிக்கு ஏகே 62 தளபதி 67 திரைப்படம் மோதும்  என திரைப்பட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவேகம் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, திரிஷா என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் அஜித்துடன் இனைய உள்ளார்.

Most Popular