Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ படத்தின் கதை தெரியும்.. அக்.19 திரையரங்கில் திருவிழா தான்

லியோ படத்தின் கதை தெரியும்.. அக்.19 திரையரங்கில் திருவிழா தான்

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பெரிய பெயர் பெற்றவர் அர்ஜுன் தாஸ். வித்தியாசமான குரல்,நடிப்பு ஆகியவற்றை வைத்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

- Advertisement -

இவர் நடித்த கைதி திரைப்படம் அர்ஜுன் தாஸுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இதன் மூலம் மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாகவும் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார்.இந்த நிலையில் அர்ஜுன் தாஸ் அநீதி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக பல்வேறு youtube சேனல்களை அர்ஜுன் தாஸ் சந்தித்து வருகிறார்.அப்போது லியோ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அர்ஜுன் தாஸ் நான் மாஸ்டர் படத்தில் இருந்த போது இருந்தே பலரும் என்னை விஜய் அண்ணா எப்படி இருக்கிறார்கள் என்று தான் கேட்பார்கள்.

- Advertisement -

அது இன்று வரை தொடர்கிறது. விஜய் சார் படத்தையும் லோகேஷ் கனகராஜ் படத்தையும் மக்கள் அந்த அளவுக்கு விரும்பி பார்க்கிறார்கள். இதனால் தான் எப்போதும் அப்டேட் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னிடமே பலரும் கேட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

சொல்லப்போனால் இந்த படத்தின் கதை எனக்கு தெரியும். இந்த படத்தின் கதையை விவாதிக்கும் போது நானும் அங்கு தான் இருந்தேன். இதனால் இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரம் எப்படி இருக்கும். முக்கிய காட்சிகள் என்ன என்று அனைத்துமே தெரியும்.

கண்டிப்பாக சொல்கிறேன் அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும். ரசிகர்கள் திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடுவார்கள். அது மட்டும் உறுதி இந்தப் படத்தில் நான் நடிக்கிறனா இல்லையா இந்தப் படம் எல் சி யூவில் வருமா இல்லையா என்பது குறித்து அக்டோபர் 19ஆம் தேதி உங்களுக்கு தெரிய வரும்.

அதுவரை கொஞ்சம் காத்திருங்கள். உங்கள் காத்திருப்புக்கு நிச்சயம் நல்ல கொண்டாட்டங்கள் கிடைக்கும் என்றும் அர்ஜுன் தாஸ் கூறியுள்ளார். தளபதி விஜயுடன் மாஸ்டரில் நடித்தது தமது திரைப்பட வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.

Most Popular