Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாவிடாமுயற்சியில் இணையும் மங்காத்தா கூட்டணி.. இரண்டு ஹீரோயின்கள்.. ! தெறிக்கும் லேட்டஸ்ட் அப்டேட்.. !

விடாமுயற்சியில் இணையும் மங்காத்தா கூட்டணி.. இரண்டு ஹீரோயின்கள்.. ! தெறிக்கும் லேட்டஸ்ட் அப்டேட்.. !

தமிழ் திரையுலகின் தல எனப்படும் அஜித்குமாரின் அடுத்தப் படமான விடாமுயற்சி குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல் ரசிகர்கள் ஏங்கிப் போய் இருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் ? யார் யார் நடிக்கிறார்கள் ? அஜித் எப்போது ஷூட்டிங் செய்ய வருவார் ? என பல கேள்விகள் அவர்களிடம் உள்ளன.

- Advertisement -

துணிவு திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருந்த அஜித் திடீரென மனம் மாறி அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை தன் அடுத்தப் படத்தின் இயக்குனர் மாற்றினார். படத்திற்கு விடாமுயற்சி என்ற தலைப்பையும் மே மாதம் அறிவித்தனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் தலைப்பைத் தவிர வேறு எந்த தகவலுமே வெளியாகவில்லை.

முதலில் மே கடைசி வாரம் அள்ளதில் ஜூன் முதல் வாரத்தில் துவங்கவிருந்த ஷூட்டிங் அடுத்தடுத்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு பக்கம் அஜித் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் பிஸியாக இருக்க மறுபக்கம் விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் தெறிக்கும் அறிவிப்புகளை வைத்து அஜித் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்

அஜித்குமார் அவர்களின் படத்திற்கு எப்போதும் சரியான அறிவிப்பு திட்டமிட்டபடி வராது. தற்போது தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த செய்திகள் அனைத்தும் அஜித் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 10 ஆண்டில் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி கண்ட திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தில் அஜித் – அர்ஜுன் கூட்டணிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது எனக் கூறலாம்.

- Advertisement -

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்துடன் அர்ஜுன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் அர்ஜுன் தாசும் இணையவிருக்கிறார். நடிகைகளில் திரிஷா இப்படத்தில் நடிப்பதை ஏற்கனவே அனைவரும் அறிவர். இரண்டாவது நாயகியாக தமன்னாவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அனைத்து மொழி நடிகர்களையும் படக்குழு அனுகவிருக்கிறது. அடுத்த மாதம் 18ஆம் தேதி முதல் அட்டவணையை துவங்க திட்டமிட்டுள்ளனர். துபாய், சென்னை மற்றும் ஹைதராபாத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இந்த அனைத்து அறிவிப்புகளும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகும்.

Most Popular