Tuesday, April 23, 2024
- Advertisement -
Homeசினிமாகமல் வெறியன்னு நிரூபித்த லோகேஸ் கனகராஜ்..! தளபதி 67ல் அர்ஜூன் கேரக்டரை பாருங்களேன்

கமல் வெறியன்னு நிரூபித்த லோகேஸ் கனகராஜ்..! தளபதி 67ல் அர்ஜூன் கேரக்டரை பாருங்களேன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் திரைப்படத்திற்கு தளபதி 67 என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனின் தீவிர பக்தர் என்று சொல்லலாம். தாம் எந்த படத்திலும் உதவி இயக்குனராகவும் எந்த இயக்குனரிடமும் உதவியாளராகவோ இருந்ததில்லை. நான் கமலஹாசன் படத்தை பார்த்துதான் சினிமாவை கற்றுக் கொண்டேன் என பலமுறை தனது பேட்டியில் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மார்க்கெட்டே இல்லாமல் ஒதுங்கி இருந்த கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை எடுத்து 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனையை லோகேஷ் கனகராஜ் செய்து காட்டினார். லோகேஷ் கனகராஜன் ஆரம்பகால படங்களில் இருந்து அவருடைய கதாபாத்திரத்திற்கு கமல்ஹாசனின் ஏதேனும் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு மாநகரம் படத்தில் சுதிப் கிசனுக்கு சத்யா கமல் தாக்கமும், நடிகர் கார்த்தியின் கைதி படத்தில் விருமாண்டி கமல்ஹாசன் சிறைச்சாலையில் இருக்கும் தாக்கமும் , மாஸ்டர் திரைப்படத்தில் நம்மவரின் தாக்கமும் இருக்கும்.

இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் அர்ஜுன் எந்த லுக்கில் இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் கமலஹாசனின் விருமாண்டி படத்தில் கெட்டப்பில் நடிகர் அர்ஜுன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

இதனை பார்த்ததும் சில்லறை சிதறவிடும் ரசிகர்கள் கமல்ஹாசன் மீது எந்த அளவிற்கு வெறி இருந்தால் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு படத்திலும் அதனை மற்ற கேரக்டர்கள் மூலம் வெளி காட்டுவார் என்று சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். அர்ஜுன் விருமாண்டி கமல் போல் இருந்தால் நடிகர் விஜய் எந்த படத்தின் கமல் போல் இருப்பார் என்றும் ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

- Advertisement -

Most Popular