Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாதாரை தப்பட்டை கிழியட்டும்.. மீண்டும் அஜித்துக்கு வில்லனாகும் அருண் விஜய்

தாரை தப்பட்டை கிழியட்டும்.. மீண்டும் அஜித்துக்கு வில்லனாகும் அருண் விஜய்

- Advertisement -

நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் குறித்து பல்வேறு அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளியாக உள்ளது. படத்தில் என்ன நடக்கிறது யார் இணையப் போகிறார் என்பது குறித்து அப்டேட்ஸ்கள் நமக்கு கிடைத்துள்ளது. இதில் ஏகே 62 திரைப்படத்திற்கு மீண்டும் இசையமைப்பாளராக அனிருத் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனிருத்துடன் இணைந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டதால் அஜித் அவருடைய பெயரையே சிபாரிசு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போன்று ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா தொடர்ந்து நான்காவது முறையாக அஜித்துடன் பணியாற்ற உள்ளார். நீரவ் ஷா அஜித்துடன் ஒத்துப் போவதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் திருமேனியின் விருப்பமான நாயகனாக விளங்கிவரும் அருண் விஜய் தல 62 படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

- Advertisement -

ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார். இது அவருடைய திரைப்பட வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் அஜித்துடன் அருண் விஜய் வில்லனாக நடிக்க உள்ளார். இது தொடர்பான கதையை அருண் விஜய் கேட்டு விட்டதாகவும் அவர் உடனே அஜித்துடன் இணைந்து நடித்த ஓகே சொல்லி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

எனினும் இதற்கு நடிகர் அஜித் சம்மதித்தால் அருண் விஜய் அஜித் ஜோடியை நாம் திரையில் காணலாம். ஏகே 62 படத்தின் கலைஞர்கள் தேர்வு ஆகிய பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. இது அனைத்தும் முடிந்த பிறகு ரசிகர்களுக்கு முறைப்படி அறிவிப்பு வெளியாகும். இதில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக படத்தின் பெயரோடு அறிவிப்பை வெளியிட லைக்கா திட்டமிட்டஉள்ளது.

Most Popular