Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாஅருண் விஜய் லுக் பார்த்தீங்களா? அடையாளம் தெரியாம மாறிட்டாரு!

அருண் விஜய் லுக் பார்த்தீங்களா? அடையாளம் தெரியாம மாறிட்டாரு!

- Advertisement -

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாரிக்கப்பட்ட வணங்கான் திரைப்படம் திடீரென்று பாதியில் நின்றது. அந்தப் படத்தில் நடித்த சூர்யா படத்திலிருந்து வெளியேறினார். இது குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் பாலா படத்தின் கதை மாற்றப்பட்டு விட்டதாகவும் அதில் சூர்யா நடித்தால் சரியாக இருக்காது என்பதால் தாமே இந்த முடிவை எடுத்ததாகவும் பாலா கூறினார்.

இந்த நிலையில் வணங்கான்  திரைப்படத்தில் அருண் விஜய் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகிய நிலையில், இன்றைய படத்தின் சூட்டிங் நேற்று தொடங்கியது .தென் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற வருகிறது.

- Advertisement -

இதில் நடிகர் அருண் விஜயின் தோற்றம் தற்போது வெளியாகி இருக்கிறது. சிறப்பாக இருக்கும் அருண் விஜய் கருப்பு வண்ணம் பூசி  ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அருண் விஜயே இப்படி மாறிவிட்டார் என்றால், இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ரோஷினி பிரகாஷ் எப்படி இருப்பார் என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

- Advertisement -

இவர் ஏற்கனவே ஏமாளி, ஜடா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் முதல் ஷெடுல் சுமார் 25 நாட்கள் வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. பகல் இரவு என படப்பிடிப்பை நடத்தி குறுகிய காலத்தில் ஷூட்டிங்கை முடிக்க இயக்குனர் பாலா முடிவு எடுத்துள்ளார்.

இது அருண் விஜய் திரைப்பட வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு தற்போது ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

Most Popular