சினிமா

எப்புடிறா? வசந்த முல்லையில் திடீரென்று தோன்றும் ஆர்யா! ஏன் மாற்றம்

பல நாட்களாக பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த நடிகர் பாபி சிம்ஹா நடித்த வசந்த முல்லை திரைப்படத்தைப் பற்றிய சில அப்டேட்கள் வெளிவந்துள்ளது. இயக்குனர் ரமணன் புருஷோத்தமன் இயக்கத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடித்திருக்கும் இந்த வசந்த முல்லை திரைப்படம் ஒரு வருடத்திற்கு முன்பே நிறைவு பெற்றது.

Advertisement

திரைப்படத்தின் உடைய பாடல்கள் டீஸர்கள் என்று இணையதளங்களில் ஒரு வருடத்திற்கு முன்பே வெளியாகிவிட்டது. ஆனால் இவை எதுவும் பெருமளவில் பிரபலம் அடையவில்லை. ஆனால் தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவலின் படி இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவும் ஒரு கதாபாத்திரமாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சார்பட்டா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஆர்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருக்கிறது. இருப்பினும் அதற்குப் பிறகு அவர் நடித்த சில படங்கள் சற்று தோல்வியை தழுவியது. இதனால் இந்தத் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் எப்படிப்பட்ட வரவேற்பை பெற போகிறது என்பது சற்று கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் இயக்குனர் ரமணன் புருஷோத்தமன் இதற்கு முன்பு சில ஷார்ட் பிலிம்களை இயக்கியிருக்கிறார். வெள்ளி திரைக்கு இவர் காலடி எடுத்து வைக்கும் முதல் படமாகும்.இந்தத் திரைப்படம் ஒரு திரில்லரான திரைப்படம் என்று கூறப்படுகிறது. இதில் நடிகர் பாபி சிம்ஹாவிற்கு கதாநாயகியாக சிகப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் நடித்த நடிகை காஷ்மிரா நடித்திருக்கிறார். மேலும் வசந்த முல்லை திரைப்படத்திற்கு பிரேமம், நேரம் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் தமிழில் வசந்த முல்லை என்றும் கன்னடத்தில் வசந்த கோகிலா என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது

Advertisement

தற்பொழுது வசந்த முல்லை திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தமிழ் ,தெலுங்கு, கன்னடம் என்ற மூன்று மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தைப் பற்றிய எந்தவித எதிர்பார்ப்புமே இல்லாதது போல் தான் தோன்றுகிறது. போதிய விளம்பரமும் ஆரவாரமும் இந்த திரைப்படத்திற்கு இருப்பது போன்று தெரியவில்லை. டீசரும் பாடல்களும் ஒரு வருடம் முன்பே வெளியானதே பலருக்கு தெரியாமல் போய்விட்டது.

இந்தப் படத்தின் டிரைலர், டீசர் என அனைத்தும் ஒரு ஆண்டுகளுக்கு முன்பே ரிலீஸ் ஆக இருந்தாலும் அதில் எதிலும் ஆர்யா இடம்பெறவில்லை ஆனால் தற்போது திடீரென்று போஸ்டரில் ஆர்யா தோன்றியிருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு படம் வெற்றி அடைவதற்கு தோல்வியடைவதற்கும் பெரும் பங்கு ரசிகர்களிடம் தான் உள்ளது .அதனால் இதற்கும் ரசிகர்கள் தான் பதிலளிக்க வேண்டும். அதுவரை காத்திருப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top